சிற்பம்
நவக்கிரகம்
சிற்பத்தின் பெயர் நவக்கிரகம்
சிற்பத்தின்அமைவிடம் கரூர் அருங்காட்சியகம்
ஊர் கரூர்
வட்டம் கரூர்
மாவட்டம் கரூர்
அமைவிடத்தின் பெயர் கரூர் அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை புராணச் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
விளக்கம்

         கரூர் அருங்காட்சியகத்தில் உள்ள நவக்கிரக சிற்பங்கள் தனித்துவமான வடிவமைப்பில் உள்ளன. கல்லின் முன்புறம் இலிங்கம் போன்ற அமைப்பில் இருந்து பிளந்து வெளிப்படுவதாக நவக்கிரகங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கல்லின் பின்புறம் பலகை போன்ற அமைப்பில் காட்டப்பட்டுள்ளது. சூரியன் நடுவில் கிழக்கு திசை நோக்கியிருக்க, மற்ற கோள்கள் அனைத்தும் அதனைச் சுற்றி வைக்கப்பட்டுள்ளன. நின்ற நிலையில் உள்ள நவக்கிரக நாயகர்கள் அனைத்துவிதமான ஆடையணிகளுடன்,  நான்கு திருக்கைகளில் அவரவர்க்குரிய ஆயுதங்களை ஏந்தியவாறு காட்சியளிக்கின்றனர். நவக்கிரகங்களின் வாகனங்களும் அவரவர் காலடியில் காட்டப்பட்டுள்ளமை சிறப்பாகும்.

ஒளிப்படம்எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

         பொதுவாக திருக்கோயில்களில் நவக்கிரகங்களை சிற்பங்களாக வைத்து வழிபடுதல் ஆகம மரபு. ஒன்பது கோள்களையும் தெய்வங்களாகக் கருதி அவர்களின் உருவமைதியினை ஆகம முறைப்படி அமைத்து கிரகங்களில் அவரவர்க்குரிய நாளில் வழிபட்டால் நன்மை கிட்டும் என்பது நம்பிக்கையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆவண இருப்பிடம் கரூர் அருங்காட்சியகம்
நவக்கிரகம்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 20 May 2020
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்