
விஷ்ணு
சிற்பத்தின் பெயர் | விஷ்ணு |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
ஊர் | கரூர் |
வட்டம் | கரூர் |
மாவட்டம் | கரூர் |
அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி. 12-13 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
பீடத்தின் மீது சுகாசனத்தில் விஷ்ணு அமர்ந்துள்ளார். பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். முன் வலது கை அபய முத்திரை காட்டுகிறது. இடது கை இடது தொடையில் அமர்ந்துள்ள பூமிதேவியின் இடையை அணைத்தபடி உள்ளது. கிரீட மகுடம் தலையில் அணி செய்கின்றது. மார்பில் முப்புரிநூல் விளங்குகின்றது. நீள் செவிகளில் மகரகுண்டலங்களும், சரப்பளி, ஆரமும் கழுத்தில் அணிந்து, கணுக்கால் வரையிலான பட்டாடை அணிந்துள்ளார். விஷ்ணுவின் இடது தொடையில் அமர்ந்துள்ள தேவியின் சிற்பம் சிதைவுபட்டுள்ளது. எனினும் தேவியின் தலையை கரண்டமகுடம் அலங்கரிக்கிறது. தொடை வரை நீண்டு தொங்கும் குறங்கணியோடு கணுக்கால் வரை நீண்ட ஆடையும், பிறவணிகளும் கொண்டு விளங்குகிறார். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
வைணவத்தின் தனிப்பெரும் முதற்கடவுளான விஷ்ணுவின் அமர்ந்த கோலம். இடது தொடையில் நிலமகளை அமர வைத்து அணைத்தபடி உள்ளமையால், இச்சிற்பத்தினை வராக அவதாரத்தின் வெளிப்பாட்டுக் குறியீடாகக் கொள்ளலாம். |
|
ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 May 2020 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |