ஆடல்வல்லான் (நடராஜர்)
| சிற்பத்தின் பெயர் | ஆடல்வல்லான் (நடராஜர்) |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
| ஊர் | கரூர் |
| வட்டம் | கரூர் |
| மாவட்டம் | கரூர் |
| அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
உலோகத்தால் செய்யப்பட்ட இந்த நடராசர் திருமேனியானது காலத்தால் பிற்பட்டதாகும். தாமரைப் பீடத்தின் மீது சுற்றிலும் காட்டப்பட்டுள்ள திருவாசியின் நடுவே ஆடல்வல்லான் ஆடுவதாக இச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. கூத்தரின் நான்கு திருக்கைகளில் பின் வலது கையிலுள்ள உடுக்கை படைப்பையும், பின் இடது கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலையும், முன் வலது கை அபய முத்திரையாக உட்புறத்தை காட்டுவது அருளலையும், முன் இடது கை துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைக்கும் ஆற்றலையும் குறிக்கின்றன. தூக்கிய பாதமாகிய குஞ்சரபாதம் மற்றும் ஆணவக் குறியீடாகிய அபஸ்மாரனை மிதித்தாடும் ஊன்றிய இடது பாதமும் மனமாயை உட்பட தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலையும் குறிப்பதாகும். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சிவபிரான் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனைத்தையும் வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என நால்வர் உட்பட பல நாயன்மார்கள் இயம்பியுள்ளனர். இதில் நடராசர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்ய வல்லமை பெற்றவன் என்ற கருத்துண்டு. ஆடல்வல்லானின் ஆடற்கோலமானது ஐந்தொழில்களின் தத்துவத்தை உள்ளடக்கியதென சைவ ஆகமங்கள் கூறுகின்றன. |
|
| ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 May 2020 |
| பார்வைகள் | 28 |
| பிடித்தவை | 0 |