அய்யனார்
| சிற்பத்தின் பெயர் | அய்யனார் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
| ஊர் | கரூர் |
| வட்டம் | கரூர் |
| மாவட்டம் | கரூர் |
| அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
| சிற்பத்தின் வகை | புடைப்புச்சிற்பம் |
| ஆக்கப்பொருள் | கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி. 10-11 - ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
அய்யனார் ஒரு அரசனைப் போன்று காட்சியளிக்கிறார். நேராக நிமிர்ந்து நேர்கொண்ட பார்வையோடு, வீரக்கழல்கள் துலங்கும் வலது காலை தொங்கவிட்டு, இடது காலை பீடத்தின் மீது குத்துக்காலிட்டு மடக்கி உத்குடிகாசனத்தில் அமர்ந்துள்ளார். அய்யன் தலையில் துலங்கும் தீச்சுடர் போன்ற ஜடாபாரத்துடனும், நெற்றியில் கண்ணி மாலை, மார்பில் முப்புரிநூல் (யக்ஞோபவீதம்), நீள்காதுகளில் பத்ர குண்டலங்கள், மார்பில் உதரபந்தம், இடையில் மடிப்புகளுடன் கூடிய ஆடையை அணிந்து, வலது கையில் செண்டை ஏந்தியுள்ளார். முன்னோக்கி நீட்டி, இடது முழங்காலில் வைத்துள்ளார். கழுத்தணிகள், கையணிகள் ஆகியன அணி செய்கின்றன. அய்யன் அமர்ந்திருக்கும் பீடத்தின் கீழே வலது பாதத்தை ஊன்றி வைப்பதற்கான பாதந்தாங்கியும் காணப்படுகின்றது. |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
அய்யனார் தமிழகத்தின் வழிபாட்டு மரபுகளின் முன்னோடி கடவுள் ஆவார். தொல்பழங்காலத்திலிருந்தே வேட்டைக் கடவுளாக அய்யனார் வழிபடப்பட்டு வருகிறார். தமிழகத்தில் அய்யனார் சிற்பங்கள் பரவலாக கிடைக்கின்றன. பல அய்யனார் சிற்பங்கள் இன்றுவரை வழிபாட்டில் உள்ளன. பல குடிகளுக்கு அய்யனார் குலதெய்வமாக விளங்குகிறார். அய்யனார் வேட்டை சமூகத்தில் ஆண் தலைமையேற்ற பண்பாட்டின் முருகனுக்கு இணையான குறிஞ்சி நிலத்தின் முதல் தலைவன் ஆவார். |
|
| ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 May 2020 |
| பார்வைகள் | 27 |
| பிடித்தவை | 0 |