
நடுகல் வீரன்
சிற்பத்தின் பெயர் | நடுகல் வீரன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
ஊர் | கரூர் |
வட்டம் | கரூர் |
மாவட்டம் | கரூர் |
அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | புடைப்புச்சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
நடுகல் வழிபாடு மிகவும் பழமையானது. இச்சிற்பத்தில் நீண்ட செவ்வக வடிவ பலகைக் கல்லில் நீண்ட குத்தீட்டியுடன் வீரன் நிற்கிறான்.வலதுபுற மார்பின் வழியே குறுக்காக இந்த நீண்ட ஈட்டியை இரு கைகளாலும் பிடித்துள்ளான். இடையில் அரையாடை, கைகளில் வளைகள் ஆகியன காணப்படுகின்றன. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
நடுகல் வழிபாடு தமிழகத்தைப் பொறுத்தவரை மிகவும் தொன்மையானது. ஆகோள், பூசல், ஊர்க்கொலை ஆகியவற்றில் இறந்துபட்ட வீரனின் நினைவாக கல் எடுப்பிக்கப்பட்டு, அதனை நாட்டி, பீடும் பெயரும் எழுதி, நன்னீராட்டி, நெய் பூசி, மயிற்பீலி சூட்டி, கள்ளும், இறைச்சியும் படைத்து வழிபாடு நடத்துவர். |
|
ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 May 2020 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |