வரலாற்றுச் சின்னம்
கரடிப்பட்டி பெருமாள்மலை சமணக்குடைவரை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | கரடிப்பட்டி பெருமாள்மலை சமணக்குடைவரை |
|---|---|
| அமைவிடம் | கரடிப்பட்டி மலை |
| ஊர் | கரடிப்பட்டி |
| வட்டம் | மதுரை மேற்கு வட்டம் |
| மாவட்டம் | மதுரை |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
மதுரையில் இருந்து தேனி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மதுரை காமராசர் பல்கலைகழகத்துக்கு சற்று முன்னரே பில்லர் சாலை தாண்டிய சில மீட்டர்கள் தூரத்தில் சாலை இடது புறம் திரும்புகிறது. உற்று நோக்காவிடில் தேனிக்கு பயணப்பட்டு விடலாம். சமணச்சின்னம் பெருமாள்மலை என்ற மஞ்சள் நிற பதாகை ஒன்று சாலையின் உட்திரும்பியவுடன் காணக்கிடைக்கும். மேலும் ஒரு கிலோமீட்டர் உள்ளே சென்றால் முத்துப்பட்டி கிராமத்துக்கு செல்லும் வழி கிடைக்கும். அங்கே பாண்டவ மலை, பெருமாள் மலையைக் காணலாம். இருபதுக்கும் மேற்பட்ட படுக்கைகள் வெட்டப்பட்ட மலைக்குகையின் வெளிப்புறத்தில் இருந்து இரண்டு தீர்த்தங்கரர்கள் . தீர்த்தங்கரர்களுக்கு கீழே இரண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கி.பி 8-9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் இந்த கல்வெட்டுகளில் இருக்கும் வரிகள் கீழ்வருமாறு: ’ஸ்வஸ்திஸ்ரீ பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரர் மாணக்கர் மகாணந்தி பெரியார் நாட்டாற்றுப்புறத்து நாட்டார்பேரால் செய்விச்ச திருமேனி‘ ’ஸ்வஸ்திஸ்ரீ வெண்புணாட்டுக் குறண்டி அஷ்டோப வாஸி படாரர் மாணாக்கர் குணசேனதேவர் மாணாக்கர் கனகவீரப் பெரியடிகள் நாட்டாற்றுப்புறத்து அமிர்த பராக்கிரம நல்லூராயின குயிற்குடி ஊரார் பேரால் செய்வித்த திருமேனி பள்ளிச் சிவிகையார் ரக்ஷ‘ குரண்டி என்ற ஊரில் இருந்த பள்ளியை சேர்ந்த மாணவர் ஒருவர் இதைச் செய்ததாக கருதலாம். குரண்டியில் சமணர்களின் பெரும்பள்ளி இருந்திருக்கவும், அப்பள்ளியில் நிறைய மாணவர்கள் பயின்றிருக்கவும் கூடும். குரண்டியின் அக்காலப்பெயர்தான் பராந்தக பர்வதம். இன்னொரு கல்வெட்டில் கீழ்குயில்குடி ஊரார்க்காக குரண்டிப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் செய்திருக்கலாம். திடிக்காத்தான் {ம}….னம் எய்…’ குகைத்தளத்தின் கற்படுக்கையில் காணப்படும் இக்கல்வெட்டு கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். திட்டியைக்காத்தான் என்பவன் செய்வித்து தந்த கற்படுகையாக இருக்கலாம். இக்கல்வெட்டு சிதைந்து காணப்படுகிறது. ’நாகபேரூரதைய் முசிறிகோடன் எளமகன்’ சிறுகுகைத் தளத்தில் கற்படுக்கையின் மீது தலைகீழாக இடவலமாக காணப்படும் இக்கல்வெட்டு கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். நாகப்பேரூர் என்பது இப்பகுதியில் உள்ள நாகமலைப் புதுக்கோட்டையைக் குறிக்கும். முசிறி என்பது சேரர் துறைமுகப்பட்டிணத்தைக் குறிக்கும். குகைத்தளத்தின் மேல் பகுதியில் மற்றொரு தமிழ் பிராமி கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. “சையஅளன் விந்தையூர் காவிய்” என சொல்லப்பட்டுள்ள கல்வெட்டும் கிமு முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாய் இருக்கக்கூடும்.
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | கரடிப்பட்டி தமிழ்-பிராமிக்கல்வெட்டு, கீழக்குயில்குடி, முத்துப்பட்டி, பெருமாள்மலை |
| ஒளிப்படம்எடுத்தவர் | சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| குறிச்சொற்கள் |
|
|
சுருக்கம்
மதுரையில் இருந்து தேனி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மதுரை காமராசர் பல்கலைகழகத்துக்கு சற்று முன்னரே பில்லர் சாலை தாண்டிய சில மீட்டர்கள் தூரத்தில் சாலை இடது புறம் திரும்புகிறது. உற்று நோக்காவிடில் தேனிக்கு பயணப்பட்டு விடலாம். சமணச்சின்னம் பெருமாள்மலை என்ற மஞ்சள் நிற பதாகை ஒன்று சாலையின் உட்திரும்பியவுடன் காணக்கிடைக்கும். மேலும் ஒரு கிலோமீட்டர் உள்ளே சென்றால் முத்துப்பட்டி கிராமத்துக்கு செல்லும் வழி கிடைக்கும். அங்கே பாண்டவ மலை, பெருமாள் மலையைக் காணலாம். இருபதுக்கும் மேற்பட்ட படுக்கைகள் வெட்டப்பட்ட மலைக்குகையின் வெளிப்புறத்தில் இருந்து இரண்டு தீர்த்தங்கரர்கள் . தீர்த்தங்கரர்களுக்கு கீழே இரண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த கல்வெட்டுகள் கி.பி 8-9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
|
|
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
3 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | மத்தியத் தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 72 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |