Back
வரலாற்றுச் சின்னம்
திருச்சுழி-பாறைக்குளம் குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் திருச்சுழி-பாறைக்குளம் குடைவரை
அமைவிடம் பாறைக்குளம்
ஊர் பாறைக்குளம்
வட்டம் திருச்சுழி
மாவட்டம் விருதுநகர்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
குன்றின் அடிவாரத்திலேயே மேற்கு நோக்கி குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. இது கருவறையை மட்டும் கொண்டுள்ள சிறிய கோயிலாகும். இதன் நுழைவாயிலையொட்டி உருவாக்கப் பெற்றுள்ள தூண்கள் முற்றுப் பெறாத நிலையில் உள்ளன. கருவறையின் உள்ளே தாய்ப்பாறையிலேயே சதுர ஆவுடையாருடன் இலிங்கத் திருவுரு உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இறைவனின் திருநாமம் "பன்னத் கிரிஸ்வரர்" என்பதாகும். அபிஷேக நீர் வடக்காக செல்லக் கால் ஒன்றும் தரையில் குடையப்பட்டுள்ளது. இக்குடைவரைக் கோயிலையொட்டி பிற்காலத்தில் அமைக்கப்பட்ட மண்டபம் ஒன்றும் காணப்படுகிறது. இக்குடைவரை பாண்டியர் கால குடைவரைக் கோயிலாகும்.
பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் கமுதிக் கோட்டை, பந்தல்குடி சிவன் கோயில்
ஒளிப்படம்எடுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக் கோட்டையினின்றும் ஏறக்குறைய 14 கி.மீ. தொலைவில் திருச்சுழி என்னும் ஊர் குண்டாறு நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற பதினான்கு திருத்தலங்களில் இது சுந்தரமூர்த்தி நாயனாரால் திருப்பதிகம் பெற்ற தலம். மேலும் இது பகவான் இரமண மகரிஷி பிறந்த புண்ணிய பூமியும் ஆகும். இங்கிருந்து பாறைக்குளம் என்ற சிற்றூருக்குச் செல்லும் வழியில் ஏறக்குறைய 2 கி.மீ. தொலைவில் இருப்புப்பாதையை அடுத்துள்ள குன்றின் மீது குடைவரைக் கோயில் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குன்றின் அடிவாரத்திலேயே மேற்கு நோக்கி குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. இது கருவறையை மட்டும் கொண்டுள்ள சிறிய கோயிலாகும். இதன் நுழைவாயிலையொட்டி உருவாக்கப் பெற்றுள்ள தூண்கள் முற்றுப் பெறாத நிலையில் உள்ளன.
குறிப்புதவிகள்
திருச்சுழி-பாறைக்குளம் குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 174
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 1

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்