வரலாற்றுச் சின்னம்
திருமயம் சிவன் குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் திருமயம் சிவன் குடைவரை
அமைவிடம் திருமயம் கோட்டை
ஊர் திருமயம்
வட்டம் திருமயம்
மாவட்டம் புதுக்கோட்டை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
திருமயத்தில் உள்ள சிவபெருமானின் குடைவரைக் கோயில் காலத்தினால், திருமாலின் கோயிலைவிடப் பழமையானதென்பர். இதில் குடிகொண்டுள்ள ஈசனுக்கு "சத்யகிரீஸ்வரர்" எனப் பெயரிட்டழைக்கின்றனர். முகப்பில் இரண்டு தூண்களையும் பக்கச் சுவர்களில் அரைத்தூண்களையும் பெற்று இது விளங்குகிறது. கட்டு, சதுரம், கட்டு, தரங்கப் போதிகை ஆகிய அங்கங்களை இவை பெற்றுள்ளன. "நந்தியின் சிற்பம்" மண்டபத்தின் நடுவில் உள்ளது. கருவறைத் தளப்பகுதி முகப்பு மண்டபத்தை விட சிறிது உயரமாகக் குடையப்பட்டுள்ளது. இதனை அடைய கைப்பிடியுடன் கூடியப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள இலிங்கம் வட்ட வடிவ ஆவுடையாரைப் பெற்றுத் திகழ்கிறது. கருவறையின் இருபக்கங்களிலும் வாயிற்காவலர் உருவங்கள் உள்ளன. அரைத்தூண்களுக்கு இடையில் கோட்டத்தில் அமைக்கப்பட்ட வாயிற்காவலரில் இடப்பக்கம் உள்ள சிற்பம். நேர்நோக்கிய நிலையில் கைகளில் ஒன்றை தடி மீது பிடித்தவாறு காட்சியளிக்கின்றது. இவரது தலையில் கரண்ட மகுடமுடன் கூடிய சடைமுடியும் தோளின் இருபக்கங்களிலும் கொம்புகள் போன்றும் காட்டப்பட்டுள்ளது. இது இவரை நந்தியின் வடிவமாகக் காட்டுகிறது. செவிகளில் பனையோலைக் குண்டலங்கள் இருக்க கைகளில் வளைகளும் கங்கணமும் அணிந்து அழகுறக் காட்சியளிக்கின்றார். இவர் வைத்திருக்கும் தடியை நாகம் ஒன்று சுற்றியுள்ளது. பிறிதொரு வாயிற்காவலர் முன்னதைவிட மாறுபட்டுக் காட்சியளிக்கிறார். இளைய முனிவர் ஒருவரைப் போன்றுள்ள இச்சிற்பம் கழுத்தில் கழுத்தணியும் மார்பில் முப்புரி நூலும் கங்கணங்களும் வளைகளும் பெற்று விளங்குகிறார். கை ஒன்றை விஸ்மய முத்திரையைக் காட்டி நிற்கின்றார். செவிகளில் பனையோலைக் குண்டலங்கள் காணப்படுகின்றன. இவரும் முன்நோக்கிய நிலையில் காட்சியளிக்கின்றார். குடைவரை மண்டபத்தின் சுவரில் இலிங்கோத்பவரின் சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இலிங்கத்திலிருந்து சிவன் தோன்றுவது போன்று இது அமைக்கப்பட்டுள்ளது. இலிங்கோத்பவர் மேற்கு நோக்கிய நிலையில் குடையப்பட்டுள்ளார். பொதுவாகக் குடைவரைகளில் இலிங்கோத்பவர் காணப்படுவதில்லை. குன்னக் குடியில் மட்டுமே இதுபோன்று உள்ளது. மேற்கு நோக்கிய இலிங்கோத்பவர் கற்றளிக் கோயில்களில் பிற்காலத்தில் கருவறையின் பின்சுவரில் மாடக்குழிகளில் அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது. அவற்றிற்கு முன்னோடியாகத் திருமயம் குடைவரை இலிங்கோத்பவர் அமைந்துள்ளது எனலாம்.
பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் திருமயம் கோட்டை, திருமயம் விஷ்ணு குடைவரை
ஒளிப்படம்எடுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மதுரை சாலையில் திருமயம் அமைந்துள்ளது. இங்குள்ள மலையும் குடைவரைக் கோயில்களும் கோட்டையும் இவ்வூர் வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஊர் என்பதைப் பறை சாற்றுகின்றன. "சத்யகிரி" என்னும் இவ்வூரிலுள்ள மலையின் அடிவாரத்தில் திருமாலுக்கொன்றும் சற்றுத் தள்ளி சிவபிரானுக்கொன்றுமாக இரண்டு குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ளன. கோட்டைக்குச் செல்லும் வழியில் மலைமீது மூன்றாவதாக ஒரு சிறிய குடைவரை உள்ளது. கீழுள்ள குடைவரைகள் இரண்டும் பிற்கால மண்டபங்கள் கோபுரங்களால் சூழப்பட்டுப் பெரிய வளாகங்களாக விளங்குகின்றன.
குறிப்புதவிகள்
திருமயம் சிவன் குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    3 Files

  • TVA_MON_00091/TVA_MON_00091_பு...

  • TVA_MON_00091/TVA_MON_00091_பு...

  • TVA_MON_00091/TVA_MON_00091_பு...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 508
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 3

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்