Back
வரலாற்றுச் சின்னம்
குன்னத்தூர் - வரிச்சியூர் குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் குன்னத்தூர் - வரிச்சியூர் குடைவரை
அமைவிடம் அஸ்தகிரீசுவரர் கோயில்
ஊர் குன்னத்தூர்
வட்டம் திருப்பத்தூர்
மாவட்டம் சிவகங்கை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
இந்த குன்னத்தூர் மலையில் கிழக்கில் ஒரு குடைவரை சிவாலயமும் மேற்கே ஒரு குடைவரை சிவாலயமும் என இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. கிழக்கில் உள்ள குடிவரைக் கோயிலில் உள்ள சிவலிங்க வடிவிலான இறைவனுக்கு உதயகிரீசுவரர் எனப் பெயர். குன்றின் கிழக்குப் பகுதியில் சூரியன் உதிப்பதால் சூரியனை நோக்கி கிழக்குப்பகுதி நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் இக்கோயில் உதயகிரீசுவரர் குடைவரைக் கோயில் என்றழைக்கப்படுகின்றது. இந்த குடைவரைக் கோயில் முற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது பாண்டியர்களால் அமைக்கப்பட்டவை.எளிமையான கருவறையில் இலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. வாயில் முகப்பின் இருபுறம் வாயிற்காவலர்கள் நின்றவண்ணம் உள்ளனர். இடதுபுறம் உள்ளர் கையில் தண்டுடன் காட்டப்பட்டுள்ளார். வலதுபுறம் நிற்பவர் கைகளைக் கட்டி பணிவுடன் இறைவன் கருவறையின் காப்பாளானாக உள்ளார். கருவறையின் எதிரே நந்தி அமர்ந்த சநிலையில் காட்டப்பட்டுள்ளது. அர்த்தமண்டபத்தின் தென்புற சுவரில் கணபதி உருவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாக்கும்நிறுவனம் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் வரிச்சியூர் பிராமிக் கல்வெட்டு, வரிச்சியூர் உதயகிரீசுவரர் கோயில், குன்னத்தூர் மலைக்கோயில்
குறிச்சொற்கள்
சுருக்கம்
மதுரை மாநகரில் உள்ள குடைவரை கோயில்களில் ஒன்று அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில். இது பாண்டியர்களால் ஏறக்குறைய கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது. மதுரையிலிருந்து சிவகங்கைக்குச் செல்லும் பாதையில் வரிச்சியூர் அருகே குன்னத்தூர் எனும் சிற்றூர் உள்ளது. முற்காலப் பாண்டியர் காலத்தில், அதாவது கி.பி 8-10ம் நூற்றாண்டு வாக்கில் இந்த ஊர் குன்றத்தூர்க் குளக்கீழ் என்ற நாட்டின் பிரிவுக்குட்பட்ட பிரம்மதேய கிராமமாக விளங்கியது. இன்று குன்னத்தூர் மலை என இப்பகுதி அழைக்கப்படுகின்றது. இங்கு அஸ்தகிரீசுவரர் என்ற பெயரில் மேற்கு நோக்கியதாக குடைவரை ஒன்று முற்காலப் பாண்டியர்களால் குடைவிக்கப்பட்டது. எளிமையான குடைவரைக் கோயிலாக இது விளங்குகிறது.
குறிப்புதவிகள்
குன்னத்தூர் - வரிச்சியூர் குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_MON_00099/TVA_MON_00099_சி...

  • TVA_MON_00099/TVA_MON_00099_சி...

  • TVA_MON_00099/TVA_MON_00099_சி...

  • TVA_MON_00099/TVA_MON_00099_சி...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 91
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்