வரலாற்றுச் சின்னம்
பூவாலைக்குடி குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் பூவாலைக்குடி குடைவரை
அமைவிடம் புஷ்பவனேஸ்வரர் கோயில்
ஊர் பூவாலைக்குடி
வட்டம் திருமயம்
மாவட்டம் புதுக்கோட்டை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் வட்டத்தில் பூவாலைக்குடி எனும் ஊர் உள்ளது. இவ்வூரில் உள்ள புஷ்பவனேஸ்வரர் குடைவரைக் கோயிலை அமரூன்றி முத்தரையர் எனும் பூதிகளரி என்பவன் அமைத்தான். அறிஞர் கூ இரா. சீனிவாசன் அவர்கள் சாத்தன் பூதியும் பூதிகளரியும் ஒருவரே எனக் கருதுவார். இக்குடைவரையும் முத்தரையர் காலத்தைச் சார்ந்ததாகும். கருவறையின் இருமருங்கிலும் அரைத்தூண்களுடன் கூடிய கோட்டங்கள் அமைந்துள்ளன. குடைவரையின் முன் பிற்கால மண்டபம் உள்ளது. அமரூன்றி முத்தரையர் பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மனின் காலத்தைச் சார்ந்தவன். எனவே இக்குடைவரை கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.
பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் திருமயம் கோட்டை, திருமயம் விஷ்ணு, சிவன் குடைவரை
ஒளிப்படம்எடுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் வட்டத்தில் பூவாலைக்குடி எனும் ஊர் உள்ளது. இவ்வூரில் உள்ள புஷ்பவனேஸ்வரர் குடைவரைக் கோயிலை அமரூன்றி முத்தரையர் எனும் பூதிகளரி என்பவன் அமைத்தான். அறிஞர் கூ இரா. சீனிவாசன் அவர்கள் சாத்தன் பூதியும் பூதிகளரியும் ஒருவரே எனக் கருதுவார். இக்குடைவரையும் முத்தரையர் காலத்தைச் சார்ந்ததாகும். கருவறையின் இருமருங்கிலும் அரைத்தூண்களுடன் கூடிய கோட்டங்கள் அமைந்துள்ளன. குடைவரையின் முன் பிற்கால மண்டபம் உள்ளது. அமரூன்றி முத்தரையர் பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மனின் காலத்தைச் சார்ந்தவன். எனவே இக்குடைவரை கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.
குறிப்புதவிகள்
பூவாலைக்குடி குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 127
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்