வரலாற்றுச் சின்னம்
நார்த்தாமலை விஷ்ணு குடைவரை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | நார்த்தாமலை விஷ்ணு குடைவரை |
|---|---|
| அமைவிடம் | நார்த்தாமலை |
| ஊர் | நார்த்தாமலை |
| வட்டம் | நார்த்தாமலை |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ. தொலைவில் கீரனூர் செல்லும் பாதையில் நார்த்தாமலை என்னும் ஊர் அமைந்துள்ளது. இவ்வூர் கல்வெட்டுகளில் "நகரத்தார் மலை" எனவும் குலோத்துங்க சோழப்பட்டினம் எனவும் தெலுங்குகுலகாலபுரம் எனவும் குறிக்கப்பெறும். சோழர் காலத்தில் சிறந்த வாணிக நகரமாக இது விளங்கியது. "நானாதேசிகன்" என்னும் வணிகக் குழுவினர் இங்கு வாழ்ந்துள்ளனர். இங்குள்ள குன்றுகள் நார்த்தாமலை, கோட்டைமலை, கடம்பர்மலை, பாண்டியன் மலை, உவச்சர் மலை, ஆளுருட்டி மலை, மான் மலை, பொன்மலை என வழங்கி வருகின்றன. இவற்றுள் நார்த்தாமலை மீது இரண்டு குடைவரைக் கோயில்கள் குடையப்பட்டுள்ளன. பிற்காலச் சோழர் பேரரசை நிறுவிய விஜயாலய சோழன் கட்டிய கற்றளியும் இம்மலைமீது உள்ளது. குடைவரைகள் இரண்டும் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளன. இங்குள்ள முதல் குடைவரைக் கோயில் சமணக்குடகு" என்று அழைக்கப்படுகிறது. இது முற்காலத்தில் சமணர்களின் வசிப்பிடமாக இருந்திருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது. ஆயின் தற்சமயம் திருமாலுக்குரிய வைணவக் கோயிலாகக் காணப்படுகின்றது. முன் மண்டபமும் கருவறைப்பகுதியும் கொண்ட இக்குடைவரைக் கோயிலில் திருமாலின் பன்னிரண்டு சிற்பங்கள் காணப்படுகின்றன. முற்றுப்பெறாத இரண்டு தூண்களையும் இரு அரைத்தூண்களையும் இக்குடைவரை முகப்பில் பெற்றுள்ளது. வாயிற்காவலர் சிற்பங்கள் மிக உயரமாக சுமார் 7 அடி உயரம் கொண்டு விளங்குகின்றன. யாளி, சிங்கம், யானை சிற்பங்களும் இங்கு செதுக்கப்பட்டுள்ளன.
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | பழியிலி ஈச்சுவரம், விசயாலய சோழீச்சுவரம் |
| ஒளிப்படம்எடுத்தவர் | சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| குறிச்சொற்கள் |
|
|
சுருக்கம்
நார்த்தாமலையில் சிவன் குடைவரைக் கோயிலுக்குத் வடபுறத்தில் மற்றொரு குடைவரை காணப்படுகிறது. இக்குடைவரை திருமாலுக்காக எடுப்பிக்கப்பட்டது. 12 திருவுருவங்களாக திருமால் நின்ற நிலையில் காணப்படுகிறார். திருமாலின் 12 நாமங்களுக்கான சிற்பங்களாக இவை காட்சியளிக்கின்றன. மிகப்பெரிய அளவில் நின்ற நிலையில் காணப்படும் திருமால் சிற்பங்கள் தமிழகத்தில் இக்குடைவரையில் தான் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்குடைவரை கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
|
|
|
குறிப்புதவிகள்
தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
|
|
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | மத்தியத் தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 158 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |