வரலாற்றுச் சின்னம்
மலையடிக்குறிச்சி குடைவரை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | மலையடிக்குறிச்சி குடைவரை |
|---|---|
| அமைவிடம் | மலையடிவாரம் |
| ஊர் | மலையடிக்குறிச்சி |
| வட்டம் | சங்கரநயினார் கோவில் |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
இக்குடைவரை கிழக்கை நோக்கியவாறு அமைந்திருப்பினும் மேற்கூறிய முன்மண்டபத்திற்கு கிழக்கிலும் மேற்கிலும் வழிகள் காணப்படுகிறது. இரு தூண்களுடன் கூடிய இம்மண்டபத்தின் வடப்பக்கம் மரகதவல்லியம்மன் சன்னதி ஒன்று உள்ளது. இதுவும் பிற்கால இணைப்பாகும்.குடைவரையின் முகப்புத்தரை முன்மண்டபத்தின் தரையைவிட சிறிது உயரமாக உள்ளது. முகப்புத் தூண்கள் இரண்டும், அவற்றிற்கு நேராகச் சுவரை ஒட்டிய அரைத்தூண்களும் இங்கு காணப்படுகின்றன. இவை சதுரம், கட்டு, சதுரம் என அமைந்துள்ளன. தூண் கட்டுகளில் தாமரை இதழ்கள் அழகுடன் வெட்டப்பட்டுள்ளன. பாண்டியர் குடைவரைகளில் இவற்றைப் பொதுவாகக் காணமுடியாது. தூண்களின் மேற்சதுரங்கள் சிலவற்றில் மலர்ந்த தாமரை, வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளன. பறவை உருவங்களும் மலரும் இணைந்து இத்தூண்களை அழகு செய்கின்றன. தெற்குத் தூணில் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ள தாமரை வட்டத்தில் இரு கைகளுடன் கூடிய உருவம் ஒன்று காணப்படுகிறது. வடக்குத் தூணின் போதிகையின் கிழக்குப் பகுதியில் குடைவரையைத் தோற்றுவித்ததைப் பற்றிய கல்வெட்டு காணப்படுகிறது. குடைவரையின் முகப்பை அடுத்து செவ்வக அளவிலான முன்மண்டபம் காணப்படுகிறது. கருவறையின் வாயிலை ஒட்டி உள்ள சுவர்ப்பகுதிகளில் பக்கத்திற்கு ஒன்றாக அரைத்தூண்களுக்கு இடையில் இரண்டு கோட்டங்கள் குடையப்பட்டுள்ளன. இவற்றுள் இருந்த சிற்பங்களைச் சிதைத்து அழித்துள்ளனர். கருவறையின் நிலைக்கால்கள் சற்று உள்ளடங்கி காணப்படுகிறது. கருவறை வாயிலின் மேலே அழகுடன் கூடிய மகரதோரணம் ஒன்று காணப்படுகிறது. கருவறையின் உள்ளே சதுர ஆவுடையாரின் மீது பொருத்திய இலிங்கம் காட்சியளிக்கிறது. இது பிற்காலத்தில் அமைக்கப் பட்டுள்ளது. அபிஷேக நீர் வெளியேற கருவறையின் முன்சுவரில் துளை ஒன்று குடையப்பட்டுள்ளது. இக்குடைவரையின் முன்மண்டப வடசுவரில் ஸ்ரீ வல்லபனின் 18 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டொன்று காணப்படுகிறது. இக்கல்வெட்டு, இக்குடைவரையின் இறைவனை மகாதேவர் எனக் குறிப்பிடுகிறது. இவற்றைத் தவிர டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தினர் துண்டுக் கல்வெட்டுகள் சிலவற்றை இங்கு கண்டுபிடித்துள்ளனர். இவை பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சார்ந்தவை. இக்குடைவரை சமணக் குடைவரையாக இருந்து இந்து சமயக் கடவுளரின் குடைவரையாக மாற்றப்பட்டுள்ளது என அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்.
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | வாசுதேவநல்லூர், திருமலாபுரம் |
| ஒளிப்படம்எடுத்தவர் | சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| குறிச்சொற்கள் |
|
|
சுருக்கம்
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி சங்கர நாயனார் கோயில் சாலையில் புளியங்குடியிலிருந்து 7 கிமீ. தொலைவில் தாருகாபுரம் என்னும் சிற்றூருக்கு அருகில் மலையடிக்குறிச்சி அமைந்துள்ளது. இவ்வூரின் வடக்கிலுள்ள குன்றின் அடிவாரத்தில் குடைவரைக் கோயில் உள்ளது. பாண்டியர் குடைவரைக் கோயில்களில் மிகவும் பழைமை வாய்ந்தது இக்குடைவரைக் கோயில். இது ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாறன் சேந்தன் என்ற பாண்டிய அரசனின் பதினேழாவது ஆட்சியாண்டில் கி.பி. 617-இல் அமைக்கப்பட்டதென்று இங்கு உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்குடைவரை கல்திருக்கோயில் என்று அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டின் மூலம் அறிகிறோம். இக்குடைவரைக் கோயிலைப் பாண்டிய மன்னன் மாறன் சேந்தனின் உத்திரவின்படி பாண்டிமங்கல அதிஅரையன் சேவூர் கிழான் சாத்தன் ஏறன் என்பவன் குடைவித்தான். இக்கல்வெட்டு தமிழ் வட்டெழுத்துக்களில் அமைந்துள்ளது. குடைவரையின் முன்பு பிற்காலத்தைச் சார்ந்த மண்டபம் ஒன்று காணப்படுகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
|
|
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | மத்தியத் தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 137 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |