வரலாற்றுச் சின்னம்
வேலூர்க் கோட்டை
தொல்லியல் சின்னத்தின் பெயர் வேலூர்க் கோட்டை
அமைவிடம் வேலூர்
ஊர் வேலூர்
வட்டம் வேலூர்
மாவட்டம் வேலூர்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.16-நூற்றாண்டு
விளக்கம்

          வேலூர்க் கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஆகும். கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய இக் கோட்டை இதன் பாரிய மதில்கள், அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி  இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது.

          நாயக்கர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும், பின்னர் மராட்டியருக்கும், தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் இறுதியாகப் பிரித்தானியருக்கும் இக் கோட்டை கைமாறியது. 1947 இல் இந்தியா விடுதலை பெறும்வரை இக் கோட்டை பிரித்தானியர்களிடமே இருந்தது. பிரித்தானியர் காலத்தில் இக் கோட்டையிலேயே திப்பு சுல்தான் குடும்பத்தினரைச் சிறை வைத்திருந்தனர் ,

         திப்புவின் குடும்பத்தினர் 1806 கிளர்ச்சிக்குப் பிறகு கல்கத்தாவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டனர், இலங்கையின் கண்டியரசின் கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் இங்கேயே சிறை வைக்கப்பட்டிருந்தான். பிரித்தானியருக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி இக் கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் நடந்தது. விஜயநகரத்துப் பேரரசன் ஸ்ரீரங்க ராயனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது இந்தக் கோட்டையிலேயே ஆகும்.

பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் வேலூர் அருங்காட்சியகம், ஜலகண்டேசுவர் கோயில்
ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசு
குறிச்சொற்கள்
சுருக்கம்

         வேலூர் கோட்டையானது வேலூரின் நினைவுச்சின்னங்களில் ஒன்று. இக்கோட்டையானது எந்நாளில் கட்டப்பட்டது என்ற சரியான விவரம் கிடைக்கப் பெறவில்லை. இக்கோட்டையிலுள்ள கல்வெட்டுக்களை நுணுக்கமான முறையில் ஆராயும் போது, இக்கோட்டையானது கி.பி.1526 முதல் கி.பி.1595 வரையிலான காலத்தில் சின்ன பொம்மி நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என அறியவருகிறது. வேலூர் கோட்டையானது தென்னிந்தியாவின் இராணுவ கட்டடக் கலையின் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது.

வேலூர்க் கோட்டை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    5 Files

  • TVA_MON_00041_வேலூர்-...

  • TVA_MON_00041_வேலூர்-...

  • TVA_MON_00041_வேலூர்-...

  • TVA_MON_00041_வேலூர்-...

  • TVA_MON_00041_வேலூர்-...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 05 Feb 2019
பார்வைகள் 195
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்