வரலாற்றுச் சின்னம்
நார்த்தாமலை சிவன் குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் நார்த்தாமலை சிவன் குடைவரை
அமைவிடம் மலையடிப்பட்டி குன்று
ஊர் மலையடிப்பட்டி
வட்டம் குளத்தூர்
மாவட்டம் புதுக்கோட்டை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
நார்த்தாமலையில் திருமால் குடைவரைக் கோயிலுக்குத் தெற்குப்புறத்தில் மற்றொரு குடைவரை காணப்படுகிறது. முகப்பில் முற்றுப்பெறாத இரு அரைத்தூண்கள் காணப்படுகின்றன. இது சிவபெருமானுக்குரியது. சதுர ஆவுடையாருடன் இலிங்கம் கருவறையில் காணப்படுகிறது. இவை தாய்ப்பாறையில் அமைக்கப்படவில்லை வாயிற்காவலர் இருவர் தனியாகக் காணப்படுகின்றனர். திரிபங்க நிலையில் கதையின் மீது சாய்ந்தவாறு இவர்கள் காட்சி அளிக்கின்றனர். இக்குடைவரை மண்டபத்தின் முன்புள்ள இடிந்த மண்டபத்தின் அடிப்பகுதியில் காணப்படும் பல்லவர் கல்வெட்டு கோவிசையை நிருபதுங்க விக்ரமர்க்கு யாண்டு ஏழாவது விடேல் விடுகு முத்தரையன் மகன் சாத்தன் பழியிலி குடைந்தெடுத்த ஸ்ரீகோயில் எனக் குறிப்பிடுகின்றது. இக்கோயிலுக்கு முக மண்டபம் முதலியன பிற்காலத்தில் சேர்க்கப் பட்டுள்ளன. மலையடிப்பட்டி சிவன் குடைவரையை அமைத்த விடேல் விடுகு முத்தரையனின் மகன் சாத்தன் பழியிலி இக்கோயிலை நிருபதுங்க பல்லவன் காலத்தில் குடைந்தமைத்தமையால் அவன் பெயரிலேயே இது (பழியிலிஈசுவரம்) என அழைக்கப்படுகிறது. சாத்தன் பழியிலியின் மகளும் மீனவன் தமிழதரையன் மனைவியுமாகிய பழியிலி சிறிய நங்கை இக்குடைவரையின் முன்பு, முகமண்டபம் அமைத்த செய்தியும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனின் காலத்தில் இக்குடைவரையின் திருமால், திருமேற்கோயில் கருமாணிக்கத் தேவர் என்று குறிக்கப்பட்டுள்ளார். மேலும் மலையடிப்பட்டி சிவன் குடைவரைக்கு சிறிது பிற்பட்ட காலமாக இவை விளங்குகின்றன.
பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் விஷ்ணு குடைவரைக் கோயில்
ஒளிப்படம்எடுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
நார்த்தாமலையில் திருமால் குடைவரைக் கோயிலுக்குத் தெற்குப்புறத்தில் மற்றொரு குடைவரை காணப்படுகிறது. முகப்பில் முற்றுப்பெறாத இரு அரைத்தூண்கள் காணப்படுகின்றன. இது சிவபெருமானுக்குரியது. சதுர ஆவுடையாருடன் இலிங்கம் கருவறையில் காணப்படுகிறது. இக்குடைவரை பழியிலிஈச்சுவரம் என்றழைக்கப்படுகிறது. இக்குடைவரை முத்தரையர் காலத்தியது. கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
குறிப்புதவிகள்
நார்த்தாமலை சிவன் குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 227
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்