Back
வரலாற்றுச் சின்னம்
திருமலை நாயக்கர் அரண்மனை
தொல்லியல் சின்னத்தின் பெயர் திருமலை நாயக்கர் அரண்மனை
அமைவிடம் பேலஸ் ரோடு
ஊர் மதுரை
வட்டம் மதுரை
மாவட்டம் மதுரை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி. 1636
விளக்கம்

          திருமலை நாயக்கர் அரண்மனை (முற்றம்) உள்ளே நுழைந்ததும் ஒரு பெரும் முற்றவெளியும் சுற்றிலும் உயரமான தூண்கள் தாங்கிய கட்டடமும் உள்ளன. மேற்கில் வேலைப்பாடுகளுடைய ஒரு கட்டடப்பகுதி உள்ளது. முற்றத்தின் வடக்கிலும் தெற்கிலும் நடுவில் சாலை வடிவமான மிகவும் உயர்ந்த கட்டடப் பகுதிகள் இருக்கின்றன. இவற்றின் ஸ்தூபிகளும் பொன்னால் செய்யப்பட்டிருந்தன.

          இரண்டு குதிரைச் சிற்பங்கள் அலங்கரிக்கும் படிகளின் வழியே, மேற்கில் எழில் வாய்ந்த பகுதியை அடையலாம். இதுவே சொர்க்கவிலாசம் என்பது. மிகவும் நெடிய தூண்களும், எழிலார்ந்த சுதை வேலைப்பாடுகளும், குவிந்து மேலே தோன்றும் விமானங்களும் கலைத்திறனின் எடுத்துக்காட்டுக்கள். பார்க்கப்பார்க்க பரவசம் ஊட்டுபவை. இப்பகுதியின் நடுவில் மிகவும் விசாலமான இடமும் அதன் மேல் குவிந்து உயர உயரச் செல்லும் விதானமும் நாம் சொர்க்கத்தில் நிற்கிறோமோ என்னும் வியப்பைத் தோற்றுவிக்கும் ஆதலால்தான் இதைச் சொர்க்கவிலாசம் என்று மன்னன் அழைத்து மகிழ்ந்திருந்தான் போலும். இதன் மேலிருந்த ஸ்தூபிகளும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன.

          இவ்விடத்தில் கல் பீடத்தின் மேல் நடுவில் யானைத் தந்தத்தாலான நுண்ணிய வேலைப்பாடு மிகுந்த ஒரு சாலை (மண்டபம்) வைக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் இரத்தினங்களால் செய்யப்பட்ட அரியணை இருந்தது. அதன் மீது அமர்ந்துதான் திருமலை மன்னன் செங்கோல் நடத்தினான்.

          சொர்க்கவிலாசத்தின் மேற்கில் அந்தப்புரம். தென்மேற்கில் கருங்கல் தூண்கள் கொண்ட ஒரு இடம் இருக்கிறது. இங்கு இரண்டு அறைகள் இருந்தன. இப்பொழுது உள்ளது ஒன்றின் பகுதியே. இங்கு அரச மாதேவியரும், பிற பெண்டிரும் இசையும், இலக்கியமும் கேட்டு மகிழ்வர். இதன் தென்மேற்கு மூலையில் அரண்மனையின் மேலே செல்ல படிகள் இருக்கின்றன. அங்கே பல பகுதிகளில் சுற்றி வர வசதி இருக்கிறது. திருமலை மன்னர் தன் மனைவியருடன் மேலே சென்று சுற்றி வரும்போது, கீழிருந்து மக்கள் கண்டு வணங்குவர்.

          சொர்க்கவிலாசத்தின் வடமேற்கில், கிழக்கு மேற்காக நீண்ட, மிகவும் எழில் வாய்ந்த ஒரு பகுதி இருக்கிறது. இதன் நடுப்பகுதி தாழ்ந்தும் சுற்றிலும் திண்ணைபோல் உயர்ந்தும் உள்ளன. தூண்களையும் மேல் பகுதிகளையும் அழகிய சுதை உருவங்கள் அலங்கரிக்கின்றன. இதன் மேற்கில் மேலே செல்வதற்கு மாடிப்படிகள் உள்ளன. இதுவே நாடகசாலை என்று குறிக்கப்படுவது. மாலை நேரங்களில் திருமலை மன்னன் தன் பெண்டிருடனும் உற்றார் உறவினருடனும் இங்கு போந்து நாட்டியமகளிர் ஆடும் பல கூத்துகளைத் தீவர்த்தி வெளிச்சத்தில் கண்டு களிப்பது வழக்கம்.

          அந்தப்புரத்தின் மேற்கில் ஆயுதசாலை இருந்தது. நாடகசாலையின் மேற்கில் 'வசந்தவாவி' என்னும் நீர்த்தடம் இருந்தது. இதற்கும் வடக்கில் மல்யுத்தம் செய்யுமிடம், ஆட்டுக்கிடாய் சண்டை செய்யுமிடம் முதலிய இடங்கள் இருந்தன. இவற்றிற்கும் மேற்கில் உற்றார், உறவினர் வசிக்கும் நீண்ட பல கட்டடங்கள் இருந்தன. நாடகசாலையின் வடகிழக்கில், கிழக்கு நோக்கிய கோயில் ஒன்று இருந்தது. இதன் முகப்பிலும், உள்ளும் கருங்கல் பணிகள் நிறைந்திருந்தன. இங்கு இராஜராஜேச்வரியையும், மற்ற பிற தெய்வங்களையும் திருமலை நாயக்கர் நாள்தோறும் வணங்குவார். இக்கோயிலின் முன்னர் ஒரு நீராவியும் மலர்வனமும் இருந்தன. இக்கோயிலின் வடக்கில் ஒரு சந்துத் தெருவில் நெடிய பத்துத் தூண்கள் இன்றும் நிற்கின்றன. இவை மறைந்த அரண்மனையின் பகுதியே.

          இவற்றின் மேற்கில்தான் ரங்கவிலாசம் இருந்தது. சொர்க்கவிலாசம் போல் இது அமைந்திருக்க வேண்டும். இதில் திருமலை நாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கர் வசித்தார். இதன் மேற்கில் சந்திரிகை மேடை என்னும் ஒரு கட்டடம் இருந்தது. இவற்றின் வடக்கில் தெற்கு மாசிவீதியை நோக்கி ஒரு நுழைவாயில் இருந்தது. இங்கு “காவல் ராஜாக்கள்” இருந்தனர். பல. பரிச்சின்னங்களும் ஆயுதங்களும் இங்கு வைக்கப்பட்டிருந்தன.

          பத்துத் தூண்களின் கிழக்கில் அரண்மனையின் நுழைவாயில் இருந்தது. அதன் முகப்பு சிறந்த வேலைப்பாடுகளுடன் திகழ்ந்தது. அங்கு 18 வித இசைக்கருவிகள் இசைக்கும் இடமிருந்தது. இப்பகுதியையே நவ்பத்கானா என்று கூறுவர். இதற்கும் கிழக்கில்தான் பல்லக்கு முதலிய பரிகலன்கள் வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தையும் சுற்றி ஒரு மதில் இருந்தது. இதைப் பாரிமதில் என்பர். சென்ற நூற்றாண்டில் கூட எஞ்சியிருந்த இம்மதில் 900 அடி நீளமும் 660 அடி அகலமும் 40 அடி உயரமுமிருந்தது.

பாதுகாக்கும்நிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, கூடலழகர் பெருமாள் கோயில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொற்கள்
சுருக்கம்

          கி.பி. 1623-லிருந்து 1659 வரை மதுரையைத் தலைநகராகக் கொண்டு சீரும் சிறப்புமாக ஆண்ட திருமலை நாயக்கரால் இவ்வரண்மனை எடுக்கப்பட்டது. தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்தது இதுவே.

          இவ்வரண்மனையைத் திருமலை மன்னர் 1636-ல் கட்டி முடித்தார். இதில் தம்முடைய 75-ம் வயது வரை மனைவியருடன் வசித்தார். திருமலை மன்னன் கட்டியபோது இப்போது எஞ்சியுள்ளதைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக இவ்வரண்மனை திகழ்ந்தது. இவ்வரண்மனையின் பல பகுதிகளைப் பற்றிய பண்டைய குறிப்புகள் உள்ளன. இங்கு சொர்க்கவிலாசம், ரங்கவிலாசம் என்று இரண்டு முக்கிய பகுதிகள் இருந்தன. தவிர, பதினெட்டுவித இசைக்கருவிகள் இசைக்கும் இடம், பல்லக்கு முதலியவை வைக்கும் இடம், படைக்கலன் வைக்கும் இடம், பூஜை செய்யும் இடம், அரியணை மண்டபம், தேவியரின் அந்தப்புரம், நாடகசாலை, உறவினர்களும், பணிசெய்வார்களும் வசிக்கும் இடங்கள், வசந்தவாவி, மலர்வனங்கள், சுற்றுமதில் முதலியன இருந்தன.

          திருமலை நாயக்கர் சொர்க்க விலாசத்திலும் அவர் தம்பி முத்தியாலு நாயக்கர் ரங்கவிலாசத்திலும் வசித்தனர். இப்பொழுது எஞ்சி உள்ள பகுதியே சொர்க்கவிலாசம் என்பது. இப்பொழுதுள்ள அரண்மனை நுழைவாயில் முதலில் வைக்கப்பட்டது அல்ல. அரண்மனையின் நுழைவாயில் இக்கட்டடத்தின் வடக்கில் இருந்தது. கட்டடத்தின் கிழக்குப்புறத்தில் பக்கத்துக்கு ஒரு சிகரமாக இரண்டு சிகரங்கள் இருக்கின்றன. இவற்றின் மேல் இருந்த ஸ்தூபிகள் தங்கத்தால் செய்யப்பட்டு இருந்தன.

திருமலை நாயக்கர் அரண்மனை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    50 Files

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

  • TVA_MON_00014_மதுரை-த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 24 Sep 2018
பார்வைகள் 516
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 1

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்