திப்பு மஸ்தான் அவுலியா தர்கா
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | திப்பு மஸ்தான் அவுலியா தர்கா |
|---|---|
| அமைவிடம் | ஆற்காடு |
| ஊர் | ஆற்காடு |
| வட்டம் | ஆற்காடு |
| மாவட்டம் | வேலூர் |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.1804 |
|
விளக்கம்
ஆற்காடு-கலவை செல்லும் சாலையில் திவான் பஜார் என்ற இடத்தில் திப்பு அவுலியா தர்கா அமைந்துள்ளது. ஐதர் அலியின் மனைவிகளின் கல்லறைகள் இங்கு உள்ளன. மைசூர் படையில் பணியாற்றி வந்த ஹைதர் அலி தன் 19ம் வயதில் (கி.பி.1731) ஷாபாஸ் பேகம் என்பவரை மணந்தார்.அடுத்த ஆண்டே இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த பின் பக்கவாதத்தால் தாக்கப்பட்டு உடல் நலிவுற்றார் ஷாபாஸ் பேகம். அதனால் தன் கணவருக்கு மறுமணம் செய்து வைக்க முடிவெடுத்து அவரை வற்புறுத்தி, கடப்பா கோட்டை தலைவர் மீர் முயின் உத்தின் மகளான ஃபாத்திமா என்கின்ற பக்குனிஸ்சாவை மறுமணம் செய்வித்தார். ஹைதர் அலிக்கு ஆண் வாரிசு பிறக்க வேண்டும் என்று எதிர்பார்த்த தம்பதியருக்கு ஆண்டுகள் பல கழிந்தும் குழந்தை பேறு அமையவில்லை இந்த கவலையில் ஜந்து ஆண்டுகள் கழிந்தன. இனி இறைவனின் அருள் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வந்தனர் தம்பதியர். ஆற்காட்டில் அமைய பெற்ற திப்பு மஸ்தான் அவுலியா என்ற இஸ்லாமிய துறவியின் நினைவிடம் உள்ள தர்காவில் சிறிது காலம் தங்கி மனமுருகப் பிராத்தனை செய்தனர் இருவரும். ஆண்டவன் அருளால் பக்குனிஸ்சா கருவுற்றார். பின்னர் 20-11-1750 அன்று தேவனஹள்ளி என்ற இடத்தில் ஆண் குழந்தை ஈன்றெடுத்தார்.குழந்தை பிறந்த செய்தி வந்தபோது ஹைதர் அலி ஹைதராபாத் நிஜாம் நாசர் ஜங்க்கு ஆதரவாக போரில் ஈடுபட்டிருந்தார். போர்களத்திலேயே தன் முதல் ஆண் குழந்தைக்கு,ஆற்காடு துறவியின் நினைவை போற்றும் வகையில் திப்பு சுல்தான் என்ற பெயரை தீர்மானம் செய்து அறிவிப்பை வெளியிட்டார் ஹைதர். ஆற்காடு துறவி திப்பு அருளால் பிறந்ததாக நம்பப்படும் குழந்தையே திப்பு சுல்தான். |
|
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | ஆற்காடு அகழ்வைப்பகம், ஆற்காடு நவாபு கோட்டை, அப்துல்லாபுரம் அரண்மனை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | திரு. சரவணன் ராஜா |
| குறிச்சொற்கள் | |
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 05 Feb 2019 |
| பார்வைகள் | 94 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |