Back
வரலாற்றுச் சின்னம்
குன்னத்தூர் - வரிச்சியூர் குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் குன்னத்தூர் - வரிச்சியூர் குடைவரை
அமைவிடம் உதயகிரீசுவரர் கோயில்
ஊர் குன்னத்தூர்
வட்டம் திருப்பத்தூர்
மாவட்டம் சிவகங்கை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
குன்னத்தூர் மலையின் மேற்குப் பகுதியில் சூரியன் மறையும் திக்கை நோக்கியவண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் சிவாலயத்திற்கு அஸ்தகிரீசுவரர் கோயில் எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது. கோயிலில் உள்ள சிவலிங்க வடிவ இறைவன் அஸ்தகிரீசுவரர் என அழைக்கப்படுகின்றார். அஸ்தகிரீசுவரர் கோயிலின் அமைப்பு ஆரம்பகால கோயில் அமைப்பின் முயற்சிகளை வெளிப்படுத்தும் தன்மையுடன் அமைந்திருக்கின்றன. இக்கோயிலினுள் ஒரு சிவலிங்க வடிவம் மட்டுமே உள்ளது. துவாரபாலகர்கள் சிற்பம் இக்கோயிலில் இடம்பெற வில்லை. பரிவார தெய்வங்களின் சிற்பங்களும் இக்கோயிலில் செதுக்கப்படவில்லை. இக்கோவிலில் கல்வெட்டுக்கள் ஏதும் பொறிக்கப்படவில்லை. சிவலிங்க வடிவ இறைவனை நோக்கிய வகையில் வெளியே நந்தி சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது கி.பி.13 -14 வாக்கிலான சிற்பமாகும். இக்கோயிலின் முகப்புப் பகுதியில் ஒரு கட்டுமானக் கோயிலின் மாதிரி வடிவம் பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளது. இதனைக் காணும் போது ஒரு கோயில் அமைக்கும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு பின்னர் பாறையைக் குடைந்து இக்குடைவரைக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று எண்ணத்தோன்றும் வகையில் இந்த அமைப்பு உள்ளது. இக்கோயில் தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் ஒரு புராதனச் சின்னமாக உள்ளது.
பாதுகாக்கும்நிறுவனம் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் வரிச்சியூர் பிராமிக் கல்வெட்டு, வரிச்சியூர் அஸ்தகிரீசுவரர் கோயில், குன்னத்தூர் மலைக்கோயில்
ஒளிப்படம்எடுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
மதுரை மாநகரில் உள்ள குடைவரை கோயில்களில் ஒன்று உதயகிரீசுவரர் குடைவரை கோயில். இது பாண்டியர்களால் ஏறக்குறைய கி.பி. 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது மதுரையிலிருந்து சிவகங்கைக்குச் செல்லும் பாதையில் வரிச்சியூர் அருகே குன்னத்தூர் எனும் சிற்றூர் உள்ளது. முற்காலப் பாண்டியர் காலத்தில், அதாவது கி.பி 8-10ம் நூற்றாண்டு வாக்கில் இந்த ஊர் குன்றத்தூர்க் குளக்கீழ் என்ற நாட்டின் பிரிவுக்குட்பட்ட பிரம்மதேய கிராமமாக விளங்கியது. இன்று குன்னத்தூர் மலை என இப்பகுதி அழைக்கப்படுகின்றது. இங்கு உதயகிரீசுவரர் என்ற பெயரில் கிழக்கு நோக்கியதாக குடைவரை ஒன்று முற்காலப் பாண்டியர்களால் குடைவிக்கப்பட்டது. எளிமையான குடைவரைக் கோயிலாக இது விளங்குகிறது.
குறிப்புதவிகள்
குன்னத்தூர் - வரிச்சியூர் குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_MON_00098/TVA_MON_00098_சி...

  • TVA_MON_00098/TVA_MON_00098_சி...

  • TVA_MON_00098/TVA_MON_00098_சி...

  • TVA_MON_00098/TVA_MON_00098_சி...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 92
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்