வரலாற்றுச் சின்னம்
தாங்கி வழிப்போக்கர் மண்டபம்
தொல்லியல் சின்னத்தின் பெயர் தாங்கி வழிப்போக்கர் மண்டபம்
அமைவிடம் தாங்கி
ஊர் தாங்கி
வட்டம் செங்கல்பட்டு
மாவட்டம் காஞ்சிபுரம்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி. 1777
விளக்கம்
மண்டபத்தின் பின்புறச் சுவரில் நடுவில் அனுமன் உருவமும், சுவரின் மேற்பகுதியில் விதானத்தையொட்டி கஜலட்சுமி உருவமும் உள்ளன. மண்டப உட்புற விதானத்தின் நடுப்பகுதியில் நன்கு செதுக்கப்பட்டுள்ள அழகிய கிளிகளின் உருவங்கள் மலரை கொத்துவது போன்றுப் புடைப்புச் சிற்பங்களாக காணப்படுகின்றன. இம்மண்டபத்தை, பல வரிசைகளில் தூண்கள் அலங்கரிக்கின்றன. இத்தூண்களில் திருமாலின் அவதாரங்களும், சிவபெருமானின் பல்வேறு வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. உட்புற மண்டபத்தின் மேற்குச் சுவரில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டு இந்த வழிப்போக்கர் மண்டபம் கி.பி. 1777-ல் தித்தர் செட்டி, முக்கர் செட்டி என்பவர்களால் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.
பாதுகாக்கும்நிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் உத்தரமேரூர், திருக்கழுக்குன்றம் குடைவரை, பெருநகர் குத்துக்கல், சேர்ப்பாக்கம் தொல்லியல்
ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொற்கள்
சுருக்கம்
சென்னையிலிருந்து வாலாஜாபத் வழியாக காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 70 கி.மீ தொலைவில் உள்ள இவ்வழிப்போக்கர் மண்டபம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இம்மண்டபம் இரண்டு பகுதிகளாகக் காணப்படுகிறது.
தாங்கி வழிப்போக்கர் மண்டபம்
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    3 Files

  • TVA_MON_00076/TVA_MON_00076_கா...

  • TVA_MON_00076/TVA_MON_00076_கா...

  • TVA_MON_00076/TVA_MON_00076_கா...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 120
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்