சிற்பம்
அசுவத்தாமன்
அசுவத்தாமன்
| சிற்பத்தின் பெயர் | அசுவத்தாமன் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
| ஊர் | காஞ்சிபுரம் |
| வட்டம் | காஞ்சிபுரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
| ஆக்கப்பொருள் | மணல் கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
|
விளக்கம்
பல்லவர்களின் குலமுதல்வனாக பல்லவர் செப்பேடுகளில் குறிப்பிடப்படும் பிராமண சத்திரியன் அசுவத்தாமன்
|
|
| ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
துரோணாச்சாரியாரின் மகனான அசுவத்தாமன் வலது காலை மடக்கி இடது காலை தொங்க விட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். இடது கையை இடது தொடையில் வைத்தவாறும் வலது கையை கடக முத்திரையில் (நண்டு பிடி) வைத்தவாறும் உள்ளார். ஜடாமகுடம் தலையை அலங்கரிக்கிறது. நீள்காதுகள் தோள்களில் தொங்குகின்றன. கழுத்தில் கண்டிகை, சரப்பளி ஆகிய அணிகள் அணிந்துள்ளார். மார்பில் பட்டையாக முப்புரி நூல் செல்கிறது. இடைக்கட்டின் ஆடை முடிச்சு அமர்ந்திருக்கும் பீடத்தின் கீழே தொங்குகின்றது. மேலே இருவர் பக்கத்திற்கொருவராக சாமரம் வீசுகின்றனர். இடது புறம் சாமரம் வீசுபவரின் அருகே மற்றொருவர் வலது கையை உயர்த்தியுள்ளார். அசுவத்தாமனின் இருக்கைக்குக் கீழே பக்கத்திற்கு ஒருவராக இருவர் ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்துள்ளனர். இருவரும் இளைய வீரர்கள் போல் காணப்படுகின்றனர்.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
அசுவத்தாமன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 22 |
| பிடித்தவை | 0 |