சிற்பம்
ஆயர் குழந்தைகள்
ஆயர் குழந்தைகள்
சிற்பத்தின் பெயர் | ஆயர் குழந்தைகள் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
மாமல்லபுரத்தில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் அமைந்துள்ள கோவர்த்தனன் புடைப்புச் சிற்பத் தொகுதியில் உள்ள ஆயர் குடும்பத்தினரும் குழந்தைகளும்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
ஆயர் குடும்பம் ஒன்று தன் குழந்தைகளுடன் மழைக்காக மலையின் அடியில் வந்து நின்றுள்ளது. இந்த ஆயர் இணையர்களுக்கு இரு குழந்தைகள் போலும். இரண்டும் ஆண் குழந்தைகள் போலத் தெரிகிறது. வயதில் பெரியவனை தாய் தன் இடது கையால் பிடித்துள்ளாள். சிறு குழந்தையோ தந்தையின் தோளில் அமர்ந்து தலையைப் பற்றியுள்ளது. இக்குடும்பத்தின் தலைவியான குழந்தைகளின் தாய் தலையில் சோற்றுப்பானை மற்றும் தயிர்ப் பானை, மற்றும் சிறு பானை ஒன்றை மூடியுடன் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி சுமந்தபடி நின்றுள்ளாள். நேர் வகிடு எடுத்து, தமிழம் கொண்டையை தலையலங்காரமாகக் கொண்டுள்ள ஆய்ச்சி கழுத்தில் ஆரம் ஒன்று அணிந்துள்ளாள். முன் கையில் ஒற்றை வளையை அணிந்துள்ளாள். அவளின் எளிய கோலம் அவளது அழகை மெருகூட்டிக் காட்டுகிறது. அவள் கையில் பிடித்திருக்கும் சிறுவனோ கழுத்தில் அணி ஒன்றை அணிந்துள்ளான். தலையில் அளகசூடகம் தலையலங்காரம் விளங்குகின்றது. இடையில் இடைக்கட்டுடன் கூடிய அரைகாற்சட்டை அணிந்துள்ளான். சிறுமி ஒருத்தியும் இத்தொகுதியில காட்டப்பட்டுள்ளாள். அவளின் கையை அவள் அன்னை பிடித்துள்ளாள். சிறுமிக்கு தலையில் அளகசூடக தலையலங்காரம் விளங்குகின்றது. செவி மற்றும் கழுத்தில் அணிந்துகள் பூண்டுள்ளாள். நளினத்துடன் நிற்கிறாள்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
ஆயர் குழந்தைகள்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |