சிற்பம்

விஷ்ணு
சிற்பத்தின் பெயர் | விஷ்ணு |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
தன் வாகனமான கருடனோடு அன்புருவாகி நிற்கும் விஷ்ணு
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
விஷ்ணு கருடனின் தோள் மீது கை வைத்து அணைத்தவாறு நிற்கிறார். தலைவனின் அணைப்பில் ஆனந்தம் கொண்டவராய் கருடன் பணிவுடன் உள்ளார். விஷ்ணு கிரீட மகுடராய், நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் இருக்கலாம். வலது முன் கை கருடனுக்கு அபயம் அளிக்கிறது. இடது முன் கை கருடனின் தோளை அணைத்துள்ளது. கணுக்கால் வரை நீண்ட ஆடையணிந்துள்ள விஷ்ணு திரிபங்க நிலையில் நின்றுள்ளார். திரிபங்க நிலை என்பது உடலை மூன்று நிலைகளில் அமைப்பதாகும். நீள் செவிகளில் மகரகுண்டலங்கள் விளங்க, கழுத்தில் சரப்பளி அணி செய்ய, மார்பில் முப்புரிநூல், உரஸ் சூத்திரம் துலங்க, இடைக்கட்டின் கடிபந்தம் இரண்டு மடிப்புகளாக முன் விழ எழிலாக நிற்கிறார். கருடன் தன் இடது முழங்காலின் மீது இடது கையை ஊன்றி சாய்ந்து நிற்கிறார். விஷ்ணுவின் மார்பு வரையே கருடனின் உருவம் அமைந்துள்ளது. அழகிய தலைக்கோலமும், கைகளில் தோள் வளை, முன் வளை ஆகியன கொண்டு விளங்குகின்றார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |