சிற்பம்

சோமாஸ்கந்தர்
சிற்பத்தின் பெயர் | சோமாஸ்கந்தர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
இறைவனும் இறைவியும் இறைவி மடியில் குழந்தை முருகனுடன் அமர்ந்திருக்கும் கோலம் சிவக்குடும்பக்காட்சி.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பீடத்தின் மேல் சிவனார் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். ஜடாமகுடம் தரித்துள்ளார். நீள் காதுகளில் மகரகுண்டலங்கள் திகழ்கின்றன. கழுத்தில் கண்டிகை விளங்குகின்றது. முப்புரிநூல் மார்பில் உடலின் பின்புறம் செல்கிறது. கேயூரம், முன்வளைகள் அணியப்பட்டுள்ளன. நான்கு திருக்கைகளில் வலது பின்கையில் இன்னதென்று அறியக்கூட வில்லை. முன்னிரு கைகளில் இடது கை யோகமுத்திரையாகவும், வலது முன்கை பிடி முத்திரையிலும் உள்ளன. உமையின் அமர்வு எழில் மிகுந்தது. உடலை இறைவன் அமர்ந்திருக்கும் பக்கம் திருப்பியும், முகம் பக்கவாட்டிலும் காட்டப்பட்டுள்ளது. வலது தொடையில் குழந்தை முருகனை இருத்தி, இடது காலை தொங்கவிட்டு இடது கையை ஊன்றிய நிலையிலும் வலது கையில் குழந்தையை அணைத்தபடியும் வைத்துள்ள தேவி கரண்டமகுடம் அணிந்துள்ளார். அன்னையின் அணிகலன்கள் ஏதும் அறியக்கூடவில்லை. சிறு குழந்தை முருகன் இருகைகளையும், கால்களையும் பரப்பியபடி கண்ணிமாலை சூடி அழகுபெற அமர்ந்துள்ளான். கீழே அமர்ந்துள்ள இடபத்தின் மீது இறைவனும் இறைவியும் தங்களின் இடது கால்களை வைத்துள்ளனர். மேலே நான்முகனும், திருமாலும் இக்காட்சியைக் கண்டு வாழ்த்தொலிக்கின்றனர். இடபத்தின் முன்னும் பின்னும் இரு கணங்கள் அமர்ந்துள்ளனர். அடியவர் ஒருவர் வணங்கிய நிலையில் உள்ளார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |