சிற்பம்
பல்லவ இளவரசன்
சிற்பத்தின் பெயர் பல்லவ இளவரசன்
சிற்பத்தின்அமைவிடம் மாமல்லபுரம்
ஊர் மாமல்லபுரம்
வட்டம் திருக்கழுக்குன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை அரச உருவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
விளக்கம்
வாயிற் காப்போனாய் நிற்கும் பல்லவ இளவரசன்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
வட்ட வடிவமான முகத்துடனும், சற்றுப் பருமனான உடற்கட்டுடனும் இளையவராய் நிற்கும் இவ்வுருவம் பல்லவ இளவலாய் இருக்க வேண்டும். அகன்ற மார்பும், விரிந்த தோள்களுமாய் காணப்படும் இவர் வலது கையை வலது தொடையில் ஊரு முத்திரையாக வைத்துள்ளார். இடது கை கடக முத்திரை காட்டுகிறது. மார்பில் முப்புரி நூல் அணிந்துள்ளார். அரைப்பட்டிகையுடன் கூடிய இடையாடை அணிந்துள்ளார். இடைக்கட்டு முன் வளைந்து காணப்படுகிறது. செவிகளில் குண்டலங்கள் தெரிகின்றன. கழுத்தில் சரப்பளி அணி காணப்படுகின்றது. நெற்றியில் கண்ணி மாலை சூடி, இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற சிறிய கிரீடத்தை தலையணியாகக் கொண்டுள்ளார். பல்லவ சிற்பியின் கை வண்ணத்தில் அழகுற காட்டப்பட்டுள்ள இச்சிற்பம் பல்லவ இளவரசனாய் இருக்கலாம்.
குறிப்புதவிகள்
பல்லவ இளவரசன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்