சிற்பம்
பல்லவ இளவரசன்
| சிற்பத்தின் பெயர் | பல்லவ இளவரசன் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
| ஊர் | மாமல்லபுரம் |
| வட்டம் | திருக்கழுக்குன்றம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | அரச உருவம் |
| ஆக்கப்பொருள் | கருங்கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
|
விளக்கம்
வாயிற் காப்போனாய் நிற்கும் பல்லவ இளவரசன்
|
|
| ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சாமரத்தை இடது தோளில் சார்த்தியுள்ள இவர் சாமர வீரன் போன்று காணப்பட்டாலும் உற்று நோக்கின் பல்லவ அரச குடும்பத்தினர் என்பது தோன்றும். வலது காலை ஊன்றி, இடது காலை சற்று தள்ளி தளர்வாக வைத்து நிற்கும் இவர், இடது கையால் இடைக்கட்டின் முடிச்சினைப் பிடித்துள்ளார். வலது கை முத்திரை ஒன்றைக் காட்டுகிறது. பத்ர பூரிம முகப்புடன் கூடிய தலைக் கோலம் கொண்டுள்ளார். செவிகளில் வலதில் பத்ரகுண்டலம் மற்றும் இடதில் சங்கக் குழையும் அணிந்துள்ளார். கழுத்தில் சவடி போன்ற அணி காணப்படுகிறது. மார்பில் முப்புரி நூல் உள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 95 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |