சிற்பம்
காவற்பெண்டிர்
சிற்பத்தின் பெயர் காவற்பெண்டிர்
சிற்பத்தின்அமைவிடம் மாமல்லபுரம்
ஊர் மாமல்லபுரம்
வட்டம் திருக்கழுக்குன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை பிற வகை
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
விளக்கம்
அன்னை தெய்வத்திற்கு காவல் புரியும் வீர மகள்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
இக்காவற் பெண் இடது காலை ஊன்றி நளினத்தோடு வலது காலை சன்று முன் வைத்து வைஷ்ண நிலையில் நின்றுள்ளாள். இடது கையை தொடையில் ஊரு முத்திரையாக வைத்தவாறும், வலது கையில் உள்ள நீண்ட வாளை நிலத்தில் குத்தி, கைப்பிடியை பிடித்தவாறும் ஒயிலாக நிற்கிறாள். அரைப்பட்டிகையுடன் கூடிய அரையாடை தெரிகிறது. மார்பில் குஜபந்தம் என்னும் கச்சை காட்டப்பட்டுள்ளது. நீள் செவிகளில் மகர குண்டலமும், பத்ர குண்டலமும் அணிந்துள்ளார். கரண்ட மகுடம் தலைக்கோலமாய் விளங்கும் இப்பெண் அன்னையின் கருவறைக்கு காவலாய் வீரமுடன் நின்றாலும் அவளின் அழகும் மிளிர்கிறது.
குறிப்புதவிகள்
காவற்பெண்டிர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 11
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்