சிற்பம்
இடபாரூடர்
சிற்பத்தின் பெயர் இடபாரூடர்
சிற்பத்தின்அமைவிடம் மாமல்லபுரம்
ஊர் மாமல்லபுரம்
வட்டம் திருக்கழுக்குன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
விளக்கம்
இடபத்தின் மேல் சாய்ந்து நிற்கும் சிவ வடிவம்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
64 சிவ வடிவங்களுள் ஒன்றான இடபாரூடர் காளை வாகனத்தோடு நின்றருளும் வடிவம் ஆகும். உலகம் அழியும் போது தானும் அழிய நேரும் என்ற பயம் தர்மதேவதைக்கு வந்தது. ஊழிக்காலத்தில் சிவபெருமான் உமாபார்வதியுடன் சேர்ந்து திருநடனம் புரிவார். அந்நாளில் புதுஉலகம் தோன்றுவிக்கப்பெறும். எனவே தர்மதேவதை சிவபெருமானை நோக்கி தவமிருந்து, அவரிடம் சரணடைந்தார். தர்மதேவதை இடபமாக மாறி நிற்க, இடபத்தின் தலையை சிவபெருமான் தொட்டு ஆசிதந்தார். இடபத்தின் திமில் மீது தன் முன் வலது கையை ஊன்றி, கால்களை குறுக்காக வைத்து நிற்கும் இடபாரூடர் நான்கு திருக்கைகளைப் பெற்றுள்ளார். இடைக்கட்டுடன் கூடிய தோலாடை உடுத்தியுள்ளார். பின்னிரு கைகளில் உள்ளவை யாதென அறியக்கூட வில்லை. ஏறிட்டுப் பார்க்கும் முகத்தோடு உள்ள இடபாரூடர் சடை மகுடம் தரித்து, செவிகளில் பத்ரகுண்டலமும், சங்கக்குழையும் அணிந்துள்ளார். கழுத்தில் ஆரம் அணி செய்கின்றது.
குறிப்புதவிகள்
இடபாரூடர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்