சிற்பம்
சுபத்திரையும் தோழியும்
சுபத்திரையும் தோழியும்
சிற்பத்தின் பெயர் | சுபத்திரையும் தோழியும் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
மாமல்லபுரத்தில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் அமைந்துள்ள கோவர்த்தனன் புடைப்புச் சிற்பத் தொகுதியில் கிருஷ்ணரின் அருகில் நிற்கும் சுபத்திரையும் அவள் தோழியும்.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கிருஷ்ணரின் இடது புறம் நிற்கும் பெண் அவர் தங்கை சுபத்திரையாய் இருக்கலாம். ஏனெனில் கோகுலத்தில் கிருஷ்ணனர் கோவர்த்தன மலையைத் தூக்கி குடையாய் பிடித்த காலத்தில் ருக்மிணி, சத்யபாமையை மணம் புரிந்திருக்க வில்லை. எனவே இப்பெண் சுபத்திரையாகவே இருத்தல் வேண்டும். அருகில் நிற்பவள் சுபத்திரையின் தோழியாக தெரிகிறாள். தலைக்கோலத்திலிருந்து அணியாடைகள் இரு பெண்களுக்கும் வேறுபடுகின்றன. இவர்களின் தோற்றமே இவர்களது பொருளாதார வேறுபாட்டைச் சுட்டுவதாக உள்ளது. இரு பெண்களும் கிருஷ்ணர் மலையைத் தூக்கும் ஆற்றலையும், நடக்கும் நிகழ்வையும் பார்த்தபடி இயக்கத்தில் உள்ளனர். பல்லவர்களது சிற்பமைதியின் சிறப்பே அவை இயங்கு தளத்தில் காட்டப்படுவதுதான். பல்லவச் சிற்பங்களின் இயக்க நிலையானது அச்சிற்பங்களை உயிரோட்டமுடையதாக்குகிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
சுபத்திரையும் தோழியும்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 17 |
பிடித்தவை | 0 |