சிற்பம்

பறவைகள்

பறவைகள்
சிற்பத்தின் பெயர் பறவைகள்
சிற்பத்தின்அமைவிடம் மாமல்லபுரம்
ஊர் மாமல்லபுரம்
வட்டம் திருக்கழுக்குன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை பறவை உருவங்கள்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
விளக்கம்
மாமல்லையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவம் என்னும் புடைப்பு சிற்பத் தொகுதியில் காட்டப்பட்டுள்ள பறவையினங்கள்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
மாமல்லபுரத்தில் உள்ள கங்கைக் கரைக் காட்சியில் பறவைகளில் சிற்பங்களும் இடம் பெறுகின்றன. இப்பறவைகள் இமயப் மலைப் பகுதியில் வாழ்பவையாகலாம். இமயமலையில் உள்ள மானசரஸ் ஏரியில் அன்னப் பறவைகள் வாழ்ந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இங்கு காட்டப்படும் இரு பறவைகள், மயில் போன்று தலையில் கொண்டையும், நீண்ட தோகையும் பெற்றுள்ளன. ஆனால் இது மயில் தானா என்பதில் ஐயம் உள்ளது. இமயமலை மோனல் (Himalayan monal) என்பது ஒரு பறவை. இது நேபாளத்தின் தேசிய பறவை மற்றும் இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் மாநிலப்பறவை. இப்பறவைகளில் ஆண் பறவைக்கு ஒளிரும் பச்சை இறகுகளும், நீண்ட பச்சைக் கொண்டையும், நீலவண்ணக்கழுத்தும் இருப்பதால் பார்ப்பதற்கு மிக அழகாகத் தோன்றும். பெண்பறவை பழுப்புவண்ண இறகுகளுடன் இருக்கும். எனவே கொண்டையுள்ள அப்பறவை இமயமலை மோனல் ஆகலாம். மற்ற இரு பறவைகள் வாத்து போன்றும் , கோழி போன்றும் தெரிகின்றது.
குறிப்புதவிகள்
பறவைகள்
சிற்பம்

பறவைகள்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்