சிற்பம்

பல்லவ இளவரசன் மற்றும் அரசகுல இளம் பெண்கள்
சிற்பத்தின் பெயர் | பல்லவ இளவரசன் மற்றும் அரசகுல இளம் பெண்கள் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | அரச உருவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
யானையின் மேல் அமர்ந்து உலா வரும் தலைவனை நோக்கும் இரு இளம் பெண்கள்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இச்சிற்பத் தொகுதியில் அருகில் உள்ள தூணின் புறம் நிற்கும் தலைவனை இரு பெண்கள் காண்கின்றனர். முதலாமவள் தோழியாய் இருக்க வேண்டும். அவள் அருகில் நாணி நிற்பவள் தலைவி. தோழி தலைவியின் கையைப் பிடித்துள்ளாள். தலைவனிடம் தலைவியின் பண்பு நலன்களை எடுத்துக் கூறுவதாக இக்காட்சி அமைகிறது. தலைவன் மிடுக்கோடு நிற்கிறான். வலது கையை வலது தொடையில் ஊரு முத்திரையாக வைத்தவாறும், இடது கையை மேலே தூக்கி தூணைப் பற்றியவாறும் மந்தகாச புன்னகையுடன் நிற்கிறான். சங்க கால அக இலக்கியங்களில் காட்டப்பெறும் தலைவன், தலைவி, தோழியின் செயல்பாடுகள் சிற்ப வடிவாக்கப்பட்டனவோ என எண்ணத் தோன்றுகிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |