சிற்பம்

கந்தர்வ இணை

கந்தர்வ இணை
சிற்பத்தின் பெயர் கந்தர்வ இணை
சிற்பத்தின்அமைவிடம் மாமல்லபுரம்
ஊர் மாமல்லபுரம்
வட்டம் திருக்கழுக்குன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை புராணச் சிற்பம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
விளக்கம்
மாமல்லையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவம் என்னும் புடைப்பு சிற்பத் தொகுதியில் காட்டப்பட்டுள்ள கந்தர்வ இணை
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
கந்தர்வர்கள் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் தொடர்பாக இருப்பவர்கள். இவர்கள் எப்பொழுதும் மகிழ்வாக பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருப்பார்கள். ஆடல் கலையில் வல்லவர்களாகவும், யாழ் போன்ற இசைக்கருவிகளை மீட்கும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். வேதங்களில் சோம ரசத்துக்குப் பாதுகாவலர்கள் கந்தர்வர்கள் என்றும் அவர்கள் வானத்தில் (உயரமான மலைகளில்) வசிப்பவர்கள் என்றும் அவர்கள் சோம ரச உற்பத்திக்குப் பெயர் எடுத்தவர்கள் என்றும் பல துதிகள் வருகின்றன. சித்தரம், நடனம், இசை போன்ற கலைகள் கந்தர்வ வேதம் என்று அழைக்கப்பெற இவர்களே காரணமாவர். அரம்பையர்கள், கந்தவர்களுடன் ஆடல் பாடல்களில் ஈடுபடுவர். அர்ச்சுனன் தவம் சிற்பத் தொகுதியில் பல கந்தர்வ இணைகள் காட்டப்பட்டுள்ளனர். கங்கையின் வரவை ஆனந்தமாக காண வரும் இவ்விணை ந்னகு அணி செய்யப்பட்டவர்களாய் தோற்றமளிக்கின்றன. கந்தர்வன் இடது கையை உயர்த்தி போற்றிப் பாடுகிறான்.
குறிப்புதவிகள்
கந்தர்வ இணை
சிற்பம்

கந்தர்வ இணை

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்