சிற்பம்

மகேசுவரன்

மகேசுவரன்
சிற்பத்தின் பெயர் மகேசுவரன்
சிற்பத்தின்அமைவிடம் மாமல்லபுரம்
ஊர் மாமல்லபுரம்
வட்டம் திருக்கழுக்குன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
விளக்கம்
சிவ வடிவங்களுள் ஒன்றான மகேசுவரன் கோலம்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
ஜடாபாரம் தலைக்கோலமாய்க் கொண்டிலங்கும் சிவனார் நான்கு திருக்கைகளுடன் நின்ற கோலத்தில் விளங்குகிறார். பின்னிரு கைகளில் மான், மழுவைத் தாங்கியுள்ளார். வலது முன் கை அபய முத்திரையும், இடது முன் கை இடையில் வைத்தவாறு கடி முத்திரையும் காட்டுகின்றன. செவிகளில் பத்ர குண்டலங்கள் விளங்குகின்றன. மார்பில் துணியாலான பட்டையான உத்தரீயம் முப்புரி நூலாக வலது கை மேலே விழுந்து உடலின் பின்புறம் செல்கிறது. அரைப்பட்டிகையுடன் கூடிய இடையாடை அரையாடையாக உள்ளது. இடைக்கட்டு எனப்படும் கடிபந்தம் வலது தொடையிலிருந்து இடது மேற்புறம் செல்கிறது. இடைக்கட்டின் முடிச்சு இடது புறம் காட்டப்பட்டுள்ளது. சிவ வடிவங்களுள் ஒன்றாய் இத்திருவுருவம் திகழ்கிறது.
குறிப்புதவிகள்
மகேசுவரன்
சிற்பம்

மகேசுவரன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்