சிற்பம்
அந்தணர்கள்
சிற்பத்தின் பெயர் அந்தணர்கள்
சிற்பத்தின்அமைவிடம் மாமல்லபுரம்
ஊர் மாமல்லபுரம்
வட்டம் திருக்கழுக்குன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை வாழ்வியல்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
விளக்கம்
மாமல்லையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவம் என்னும் புடைப்பு சிற்பத் தொகுதியில் காட்டப்பட்டுள்ள அந்தணர்கள்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
கங்கைக் கரையில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை படம் பிடித்துள்ளார் பல்லவச் சிற்பி தன் உளிகளினால். கங்கையாற்றங்கரையில் ஒருவர் கைகள் இரண்டையும் மேலே தூக்கி சூரிய நமஸ்காரம் எனப்படும் யோக முத்திரைகளுள் ஒன்றைச் செய்தபடி உள்ளார். அவர் அருகிலுள்ள மற்றொருவர் கைகளைக் குவித்து தலையைத் தாழ்த்தி வணங்குகிறார். இதுவும் அன்றாடம் காலையில் செய்யப்படும் நீர் சார்ந்த பிராமணர்களின் வழிபாடாகும். மற்றொருவர் பானையொன்றில் கங்கை நீரை முகர்ந்து தனது இடது தோளில் வைத்துள்ளார். இந்நீர் இறைவனின் திருமுழுக்கு பயன்பாட்டிற்கானது. இன்னொருவர் தனது உத்தரீயம் எனப்படும் மேலோடையை பிழிந்தபடி உள்ளார். அவர் அப்போது தான் நீராடியிருப்பார் போலும். இந்நால்வரும் கணுக்கால் வரை அணிந்துள்ள நீண்ட கீழாடையை கால்களுக்கு குறுக்கே மடித்துக் கட்டியுள்ளனர். மார்பில் முப்புரிநூல் அணிந்துள்ளனர். தலைக்கோலமும், நீள் செவிகளும் அவர்களை அந்தணர்கள் என்றே குறிப்பிட வைக்கிறது.
குறிப்புதவிகள்
அந்தணர்கள்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்