சிற்பம்

மறையவரும் சீடரும்
சிற்பத்தின் பெயர் | மறையவரும் சீடரும் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
வேத வேள்வி செய்யும் மறையவரும், இளம் பிராமணரும்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இடது கையில் கரகம் எனப்படும் நீர்க் கமண்டலத்தையும் வலது கையில் உள்ள கருவி சுருவமாக இருக்கலாம். “சிறுக்’ , ’சுருவம்’ : இவை கரண்டிகள். பிரம்மனின் கருவிகள். யாக சாலையில் யாக குண்டத்தில் தீக்கு நெய்யை உற்ற உதவும் கருவிகள் இவை. யாகம் முடியும் கடை நாளில் பூர்ணஹுதி என்னும் வழக்கில் பல்வேறு காணிக்கைகளை யாக குண்டத்தில் போட இந்தக் கருவிகள் உதவும். ’சிறுக்’ என்பது கட்டையால் ஆன கரண்டியாகும். சுருவம் சற்று வேறுபடும். சதுர வடிவில் இருக்கும் இதன் தலையில் பசு , யானை மற்றும் இதர பிராணிகளின் தலைகளின் வடிவங்கள் அலங்கரிக்கும். இவற்றின் அளவு ஒரு முழமாக இருக்கும். இச்சிற்பத்தில் சுருவத்தினை வலது கையில் பிடித்து வலது தோளில் சார்த்தியுள்ளார். இவர் வேள்வி புரியும் மறையவராய்த் தெரிகிறது. இம்முதியவருக்கு பின்னால் இளையவர் ஒருவர் கையில் கமண்டலத்தோடு நிற்கிறார். இவர் முதிய மறையவருக்கு உதவியாளராய் இருக்கலாம்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |