சிற்பம்
கோவர்த்தனன்
கோவர்த்தனன்
சிற்பத்தின் பெயர் | கோவர்த்தனன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
மாமல்லபுரத்தில் கிருஷ்ண மண்டபத்தில் அமைந்துள்ள கோவர்த்தனன் புடைப்புச் சிற்பத் தொகுதி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மழைக்கடவுளான இந்திரனுக்கு ஆயர்பாடி ஆயர்கள் ஆண்டு தோறும் பூசை செய்து வழிபட்டனர். ஏனெனில் கால்நடை வளர்ப்பு சமூகத்தைச் சேர்ந்த அம்மக்களின் வாழ்வாதாரமான ஆநிரைகளுக்கு தேவையான நீரை (மழையை) மழைக்கடவுளான இந்திரனே அருள முடியும் என்று நம்பினர். ஒருமுறை, அதற்குரிய ஏற்பாட்டை கிருஷ்ணன் தடுத்து அருகில் உள்ள மலைக்கு பூசை செய்ய வைத்தார். ஏனெனில் மழைக்கு மலையே காரணம் என்பது அவர் துணிபு. இதனால் கோபம் கொண்ட மழைக் கடவுளான இந்திரன், கோகுலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் மழை பொழியச் செய்தார். இடி மின்னலுடன் கூடிய தொடர் மழையைக் கண்டு பயந்த கோகுலத்து ஆயர்களையும் ஆவினங்களையும் காக்க கிருஷ்ணன், அருகில் இருந்த ஒரு மலையைத் தன் ஒரு விரலால் குடை போல் தூக்கினார். குடை போல் காட்சி அளித்த அம்மலைக்கடியில் நுழைந்த ஆயர்களும், ஆவினங்களும் மழையிலிருந்து காக்கப்பட்டனர். இப்படி ஒரு வரையை (மலையை) தூக்கியதால் திருமால் வரையெடுத்தோன் என்று அழைக்கப்படுகிறார். இச்சிற்பத் தொகுதியில் மையமாக கோவர்த்தனன் மலையை ஒரு கையால் தூக்கிப் பிடித்துள்ளார். பலராமன் இடையர் ஒருவரின் தோளை அணைத்தபடி நிற்கிறார். இவர்களைச் சுற்றிலும் ஆநிரைகளும், ஆயர்களும் , ஆய்ச்சியர்களும் தத்தம் வேலைகளில் ஈடுபட்டவாறு உள்ளனர். இடையர் ஒருவர் பால் கறக்கிறார். மற்றொருவர் குழலூதுகிறார். அழும் குழந்தைக்கு குழலின் இசையை கேட்கப் பழக்கி சமாதானப்படுத்துகிறாள் ஒரு தாய். இடைச்சி ஒருவளோ கையில் உறிப்பானைகளை பிடித்துக் கொண்டு தலையில் சுருட்டிய பாயை சுமந்துள்ளார். ஆயர் கூட்டமும், ஆநிரையுமன்றி, சிங்கம், புலி போன்ற கொடிய விலங்குகளும் மலையின் அடியில் அமர்ந்துள்ளன. சிங்கங்களின் மேல் பல்லவர்களுக்கு தனிக் காதல் உண்டு போலும் இச்சிற்பத் தொகுதியிலும், அர்ச்சுன் தபசு சிற்பத் தொகுதியிலும் சிங்கங்கள் அதிக எண்ணிக்கையில் வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பத் தொகுதியில் சிங்க உடலும் மனித முகமும் கொண்ட வடிவம் ஒன்று சிங்கங்களின் நடுவில் காட்டப்பட்டுள்ளது. இவ்வுருவத்திற்கு மீசை காட்டப்பட்டுள்ளது. கொம்புகளும் உள்ளன. பல்லவச் சிற்பியின் கற்பனைத்திறம் இதுவெனக் கொள்ளலாம்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
கோவர்த்தனன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |