சிற்பம்
இலிங்கோத்பவர்
சிற்பத்தின் பெயர் இலிங்கோத்பவர்
சிற்பத்தின்அமைவிடம் திருக்கோழம்பம் கோகிலேசுவரர் கோயில்
ஊர் திருக்கோழம்பம்
வட்டம் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் திருக்கோழம்பம் கோகிலேசுவரர் கோயில் கருவறை விமானம் மேற்குக் கோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / செம்பியன்மாதேவியார்
விளக்கம்
a:1:{i:0;s:3251:"இலிங்கோத்பவர் பிளந்த இலிங்கத்தின் நடுவில் சமபாதத்தில் நின்றுள்ளார். தீக்கால் அடிகள் இலிங்கத்திலிருந்து வெளிப்படுதல் இலிங்கபுராணத்தில் கூறப்படுகிறது. ஜடாமகுடம் தரித்து, நான்கு திருக்கைகளில் மேலிரு கரங்களில் மான், மழுவினைக் கொண்டுள்ளார். முன்னிரு கரங்களில் வலது கை காக்கும் முத்திரையிலும் ஒரு விரல் சிதைந்துள்ளது. முன் இடது கையை கடி முத்திரையாக இடையில் வைத்துள்ளார். அரைக்காற் சட்டை அணிந்துள்ள இலிங்கபுராண தேவர் நன்கு வடிவமைக்கப்பட்ட அணி வகைகளை உடலில் அணிந்துள்ளார். அண்ணாமலையாருக்கு தொடை வரையிலான அரையாடை காணப்படுகிறது. இடைக்கட்டின் ஆடை முடிச்சுகள் தொடையின் பின்புறம் இருபுறமும் நீண்டு தொங்குகின்றன. வயிற்றில் உதரபந்தம், மார்பில் முப்புரிநூல் மற்றும் காதணி, கழுத்தணி, கையணி ஆகிய இன்ன பிறவணிகளைப் பூண்டுள்ளார். இலிங்கத்தின் மேற்புறம் அன்னப் பறவை ஒன்று பறந்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. பிரம்மன் அப்பறவையின் வடிவாய் கருதப்படுகிறார். இலிங்கத்தின் அடிப்பகுதியில் விஷ்ணு வராகராய் இரண்டு கைகளாலும் முகக் கொம்பினாலும் நிலத்தைத் தோண்ட முனைபவராய் காணப்படுகிறார். குப்புற படுத்த நிலையில் கேழலாய் அண்ணலின் அடி காணச் செல்பவராய் உள்ள விஷ்ணுவின் அரையாடை மற்றும் அணிகலன்கள் நன்கு தெரிகின்றன. இருபுறமும் நான்முகனும் திருமாலும் நின்ற நிலையில் சிறு புடைப்புக் குறுஞ்சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளனர்.";}
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருக்கோழம்பம் என்னும் தலத்தில் அமைந்துள்ள இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் 35-ஆவது திருத்தலமாகும். அப்பரும், திருஞானசம்பந்தரும் இத்தலத்தைப் பாடிப் பரவியுள்ளனர். முற்காலச் சோழர்களின் கலைப்பாணியில் அமைந்த திருக்கோழம்பநாதர் கோயில் கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி அவர்களால் கட்டப்பட்ட கலைக்கோயிலாகும். இங்குள்ள சிற்பங்களின் உருவமைதி மிகவும் எழில் வாய்ந்தவை. இலிங்கத்தின் நடுவில் இருந்து வெளிப்படும் அண்ணலாய் நிற்கும் சிவபெருமானின் அடிமுடி காணவியலா நான்முகன், திருமாலின் சிற்பங்களை கருவறை விமானத்தின் மேற்குக் கோட்டத்தில் அமைப்பது மரபு.
குறிப்புதவிகள்
இலிங்கோத்பவர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 18
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்