பாவை விளக்கு
பாவை விளக்கு
சிற்பத்தின் பெயர் | பாவை விளக்கு |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | குற்றாலம் அகழ் வைப்பகம் |
ஊர் | குற்றாலம் |
வட்டம் | தென்காசி |
மாவட்டம் | தென்காசி |
அமைவிடத்தின் பெயர் | குற்றாலம் அகழ் வைப்பகம் |
சிற்பத்தின் வகை | தூண் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
பாவை ஒருத்தி நின்ற நிலையில் இறைவனுக்கு திருவிளக்கினை இரு கைகளிலும் ஏந்தி கருவறை வாயிலின் முன்னே நிற்கும் சிற்பம் பாவை விளக்கு என்னும் சிற்பம் ஆகும். இறைவன்பால் பக்திமை கொண்ட பெண்கள், இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்து, கோயிலில் சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவற்றுள் ஒன்று தான் கோயிலில் விளக்கெரித்தல். அதிலும் கருவறையின் முன்னால் நின்று கையில் விளக்கேந்தி நிற்றல் என்பது சிறப்பிற்குரியது. அத்தகையதொரு சிற்பத்தைத் தான் இங்கு காண முடிகிறது. இப்பாவை பெரிய கொண்டையுடன், நீள்செவிகளில் ஆபரணங்களுடன், பல வகையான அணிகலன்களை அணிந்துள்ளார். விளக்கேந்திய கைகளில் வளைகள் விளங்குகின்றன. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.தெ.பொன் கார்த்திகேயன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பாவை விளக்கு என்பது ஒரு பெண் தன் இரு கைகளில் விளக்கினை ஏந்தியபடி இறைவனின் திருத்தலத்தில் நின்று கொண்டிருக்கும் உருவ அமைப்பாகும். கி.பி.16-ஆம் நூற்றாண்டில் விசயநகர பேரரசு காலத்தில் இத்தகைய பாவை விளக்குகள் கல்லிலும், உலோகத்திலும் கோயிலுக்கு செய்தளிக்கப்பட்டன. இவை பெண் அடியார்கள் கோயிலுக்கு தங்களை அர்ப்பணிக்கும் தொண்டைக் குறிப்பிடுகிறது. |
பாவை விளக்கு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Aug 2022 |
பார்வைகள் | 18 |
பிடித்தவை | 0 |