
மைத்ரேயர்
சிற்பத்தின் பெயர் | மைத்ரேயர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
ஊர் | நாகப்பட்டினம் |
வட்டம் | நாகப்பட்டினம் |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
சிற்பத்தின் வகை | பௌத்தம் |
ஆக்கப்பொருள் | உலோகம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.13-ஆம் நூற்றாண்டு / பிற்காலச் சோழர் |
அளவுகள் / எடை | உயரம் 76 செ.மீ. |
விளக்கம்
சோழர்கள் காலத்தில் செய்யப்பட்ட வைதிகக் கடவுளரின் உருவதிமையைக் கொண்டவாறு புத்தரின் மற்றொரு இளமையான அழகு பொருந்திய வடிவான மைத்ரேயர் உருவத் திருமேனி செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. மைத்ரேயர் திரிபங்க நிலையில் தாமரைப்பீடத்தின் மீது நான்கு திருக்கைகளுடன் நின்றுள்ளார். மேலிரு கைகளில் அக்கமாலையும், மலரும் கொண்டுள்ளார். கீழிரு கைகள் வரதம் மற்றும் கடக முத்திரைகளைக் காட்டுகின்றன. தலை அலங்காரம் ஜடாமகுடம் தீசுவாலையாகக் காட்டப்பட்டுள்ளது. தலையின் உச்சியில் சிரஸ்சக்கரம் அமைந்துள்ளது. நெற்றியில் தொங்கலுடன் கூடிய நெற்றிப்பட்டமும், காதுகளில் குண்டலங்களும், தோள்களில் வாகுமாலையும், கழுத்தில் மூன்று வகையான ஆரங்களும், மார்பில் தவழும் முப்புரிநூலும், வயிற்றில் உதரபந்தமும், இடையில் முகப்புடன் கூடிய இடைவாரும், குறங்கணியும், கைகளில் வளைகளும், கடகமும், கால்களில் பாதசரமும் அணி செய்ய அரையாடையுடன், புன்னகை தவழும் எழிலார்ந்த முகத்துடன் மைத்ரேயர் நிற்கிறார். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மகாயான பௌத்தத்தில் மைத்ரேயர் எனப்படும் புத்தரின் வடிவம் முதன்மை தெய்வம் ஆகும். மைத்தேரயர் வடிவம் புத்தரின் இளமை மற்றும் அழகு பொருந்திய வடிவம் ஆகும். |
|
ஆவண இருப்பிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
குறிப்புதவிகள்
|

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 02 Aug 2018 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |