Back
சிற்பம்
கொற்றவை - மகிடமர்த்தினி
சிற்பத்தின் பெயர் கொற்றவை - மகிடமர்த்தினி
சிற்பத்தின்அமைவிடம் திருக்கோழம்பம் கோகிலேசுவரர் கோயில்
ஊர் திருக்கோழம்பம்
வட்டம் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் திருக்கோழம்பம் கோகிலேசுவரர் கோயில் அர்த்தமண்டப வடபுறக் கோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / செம்பியன்மாதேவியார்
விளக்கம்
a:1:{i:0;s:1513:"மகிடனின் தலை மீது சமபாதத்தில் மகிஷாசுரமர்த்தினி நின்றுள்ளாள். கரண்ட மகுடம் தரித்துள்ள தேவி காதுகளில் பத்ர குண்டலங்கள் அணிந்துள்ளார். கழுத்தில் கண்டிகை, மார்பு வரையிலான ஆரம் அணி செய்கின்றன. மார்பில் குஜபந்தம் காட்டப்பட்டுள்ளது. இடைவார்ப் பட்டையுடன் கூடிய அரையாடை அணிந்துள்ளார். இடைக்கட்டு (கடி பந்தம்) முன்புறம் தொடை மீது வளைந்து காட்டப்பட்டுள்ளன. இடைக்கட்டின் முடிச்சு பின்புறம் அமைந்துள்ளது. நான்கு திருக்கைகளில் பின்னிரு கைகளில் இருப்பது சங்கு, சக்கரமாய் இருக்கலாம். வலது முன் கை அபய முத்திரையும், இடது முன் கை தொடையில் வைத்த ஊரு முத்திரையாகவும் உள்ளன.";}
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருக்கோழம்பம் என்னும் தலத்தில் அமைந்துள்ள இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் 35-ஆவது திருத்தலமாகும். அப்பரும், திருஞானசம்பந்தரும் இத்தலத்தைப் பாடிப் பரவியுள்ளனர். முற்காலச் சோழர்களின் கலைப்பாணியில் அமைந்த திருக்கோழம்பநாதர் கோயில் கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி அவர்களால் கட்டப்பட்ட கலைக்கோயிலாகும். இங்குள்ள சிற்பங்களின் உருவமைதி மிகவும் எழில் வாய்ந்தவை. மகிடமர்த்தினி கொற்றவை சோழர் காலத்திய தனிப்பெரும் கலைப்பாணி உடையவை. கருவறை திருச்சுற்றின் அர்த்தமண்டப வடபுறக் கோட்டத்தில் அமைக்கப்படும் இத்தேவியின் கலை நளினம் சோழ சிற்பிகளுக்கு கைவந்த கலைபோலும். குடந்தை கீழ்கோட்டம், புள்ளமங்கை, புஞ்சை நல்துணையீச்சுவரம் ஆகிய கோயில்களில் அமைந்த மகிஷமர்த்தினியைப் போன்று இக்கோயிலின் உருவமைதியும் தோற்றப்பொலிவுடனும், நேர்த்தியுடனும் வடிக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
கொற்றவை - மகிடமர்த்தினி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்