பிராம்மி
பிராம்மி
சிற்பத்தின் பெயர் | பிராம்மி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
ஊர் | கங்கை கொண்ட சோழபுரம் |
வட்டம் | ஜெயங்கொண்டம் |
மாவட்டம் | அரியலூர் |
அமைவிடத்தின் பெயர் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
சிற்பத்தின் வகை | தாய்த்தெய்வ சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
அன்னையர் எழுவருள் முதன்மையானவரான பிராம்மி சிற்பம் இங்கு பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. நான்கு திருக்கைகளுடன் பிராம்மி விளங்குகிறார். நான்முகனின் துணைவியாக கருதப்படும் பிராம்மி தேவி மேலிரு கைகளில் அக்கமாலையும், கெண்டியும் கொண்டுள்ளார். முன் இடது கை இடது தொடையின் மீது வைக்கப்பட்டுள்ளது. முன் வலது கை அபய முத்திரை காட்டுகிறது. தலையில் ஜடாபாரம் விளங்கிட, நீள் செவிகளில் குண்டலங்களும், மார்பில் கண்டிகை, சரப்பளி துலங்கிட, மார்பின் குறுக்கே பெரிய தடிமனான யக்ஞோபவீதம் செல்கிறது. கணுக்கால் வரையிலான நீண்ட மடிப்புடன் கூடிய ஆடை அணிந்துள்ளார். தேவி நான்கு திருமுகங்களைக் கொண்டுள்ளார். சுகாசனத்தில் அமர்ந்துள்ள அன்னையின் முகம் பொலிவுடன் திகழ்கிறது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சப்தமாதர்களுள் ஒருவராகிய பிராம்மி சிற்பம் சோழர் கலைப்பாணியைப் பெற்று விளங்குகிறது. கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டுள்ளது. |
பிராம்மி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 30 Aug 2022 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |