சிற்பம்

ஈங்கூர் அய்யனார்

ஈங்கூர் அய்யனார்
சிற்பத்தின் பெயர் ஈங்கூர் அய்யனார்
சிற்பத்தின்அமைவிடம் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
ஊர் ஈரோடு
வட்டம் ஈரோடு
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை நடுகல் புடைப்புச் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.1156
விளக்கம்
கொங்குச் சோழமன்னன் குலோத்துங்கச் சோழதேவனின் அரசியல் அலுவலன மேல்கரைப் பூந்துறைநாட்டு ஈங்கூரைச் சேர்ந்தவன். காவிலன் குறும்பிள்ளர் இனத்தைச் சேர்ந்த போத்தன் செய்யானான குலோத்துங்கப் பல்லவரையன் எழுந்தருளுவித்த அய்யனார் சிற்பம் இதுவாகும். அய்யனார் உத்குடிகாசனத்தில் வலது கையில் வளைதடியுடன் (செண்டு) அமர்ந்துள்ளார். இடது காலின் கீழே ஒருவன் வீழ்ந்து கிடக்கிறான். விரிசடையுடனும், நீள் செவிகளுடனும், முகத்தில் மீசையுடனும் வீரக்கடவுள் அமர்ந்துள்ளார். மார்பில் புரிநூல் காட்டப்பட்டுள்ளது. மணிகற்களால் ஆன நெற்றிப்பட்டை, கழுத்தணி, கையணி, காலணிகள் முதுலானவற்றை அணிந்துள்ளார். அய்யனின் இடது புறம் மூவர் உள்ளனர். முதலாமர் இடது கையை தியான முத்திரையிலும், வலது கையால் போற்றி முத்திரையிலும் வைத்துள்ளார். நடுவில் நிற்பவர் கைகூப்பி வணங்கிய நிலையில் நிற்கிறார். இவரின் காலின் கீழ் பன்றியின் உருவம் காட்டப்பட்டுள்ளது. அடுத்து நிற்பவர் வேடராக காட்சியளிக்கிறார். இடது கையில் வில் அம்புடனும், வலது கையால் இடையில் உள்ள வாளை தொட்டவாறும், தோலாடையுடனும், உச்சிக் கொண்டையுடனும் நிற்கிறார். அய்யனார் தொல்பழங்காலத்திலிருந்தே வேட்டுவக் கடவுள். இந்நிலை கொங்குநாட்டில் இன்றும் அய்யனார் வழிபாட்டில் நிலவி வருகிறது. ஐயனின் வலது புறம் இருவர் நிற்கின்றனர். மேலே மான் காட்டப்பட்டுள்ளது.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
கொங்குச் சோழமன்னன் குலோத்துங்கச் சோழதேவனின் அரசியல் அலுவலன மேல்கரைப் பூந்துறைநாட்டு ஈங்கூரைச் சேர்ந்தவன். காவிலன் குறும்பிள்ளர் இனத்தைச் சேர்ந்த போத்தன் செய்யானான குலோத்துங்கப் பல்லவரையன் என்பவன் இந்த ஐயனாரை எழுந்தருளுவித்துள்ளான்.
குறிப்புதவிகள்
ஈங்கூர் அய்யனார்
சிற்பம்

ஈங்கூர் அய்யனார்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்