சிற்பம்
நந்தி
நந்தி
சிற்பத்தின் பெயர் | நந்தி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கழுகு மலை வெட்டுவான் கோயில் |
ஊர் | கழுகு மலை |
வட்டம் | கோவில்பட்டி |
மாவட்டம் | தூத்துக்குடி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
விளக்கம்
சிவபெருமானின் வாகனமாயும், கைலாயத்தின் காவலுமாய் அமைந்துள்ள நந்தி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தருமநெறியில் நின்ற, சாஸ்திர ஞானம் மிகுந்த ஷிலாதர் என்ற முனிவர் ஆயிரம் ஆண்டுகள் சிவனை நோக்கித் தவம் செய்ய சிவபெருமான் அவர் முன் தோன்றி வேண்டிய வரம் யாது? என்று கேட்க, அம்முனிவர் தாயிடம் பிறக்காத ஒரு புதல்வனைத் தனக்கு அருளுமாறு வேண்டினார். சிவன் அவ்வாறே வரம் அளித்தார். ஸ்ரீசைலம் மலையில் சிலாதர் வசித்தாக கூறப்படுகிறது. ஷிலாதர் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது ஓர் அழகிய பையன் ஏரியின் மீது திடீரென்று தோன்றினான். அவனைச் சுற்றி நான்கு பக்கமும் பேரொளி வீசியது. அவன் ஷிலாதரைத் தந்தையே என்று கூப்பிட்டான். அவனுக்கு நந்தி எனப் பெயரிடப்பட்டது. ஷிலாதர் தன்னுடைய காளைகளின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தமையால் நந்தி தேவரும் காளையைப் போலவே பிறந்தார். அவன் கல்வி கற்க ஆரம்பித்து சகல சாஸ்திர சம்பன்னன் ஆனான். நந்தி சிவதரிசனம் பெறவும், தான் மரணமின்றி இருக்கவும் சமுத்திர தீர்த்தத்தில் ஓரிடத்தில் கோடி சிவ நாமம் ஜபித்துத் தவம் செய்தான். சிவபெருமான் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க இன்னும் கோடி சிவநாமம் ஜபிக்க ஆயுள் வேண்டும் என்றான். அவ்வாறே வரம் அளித்தார் பரமசிவன். இம்மாதிரி மும்முறை நிகழ கடைசியில் சிவபெருமான் தோன்றி சிவநாம ஜபம் போதும். மேலும் தவம் வேண்டாம். உனக்கு மரணம் ஏற்படாது. நீ ஒரு கணநாதன் ஆகி கணங்களுக்கெல்லாம் நாயகனாக விளங்குவாய், என்னை விட்டுப் பிரியாத தோழனாவாய் என்று வரமளித்தார். மருத்தின் புதல்வியாகிய சுயாஷாவை நந்திக்குச் சிவபெருமான் மணம் செய்து வைத்தார். நந்தி எப்போதும் சிவ சந்நிதியில் பரமனைப் பிரியாமல் இருந்தார். நந்தி என்றால் பேரானந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். கழகுமலை வெட்டுவான் கோயிலில் விமானத்தின் கழுத்துப் பகுதியில் நந்தி காட்டப்பட்டுள்ளது. முன்னங்கால்களை மடக்கி அமர்ந்துள்ள நந்தியின் கழுத்தில் பட்டையான அணிகலனுடன் கூடிய மணி ஒன்று தொங்குகிறது. விடைத்த சிறிய காதுகள், வெருட்டும் கண்கள் கொண்டுள்ளது. முதுகில் பெரிய திமில் காட்டப்பட்டுள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
நந்தி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |