சிற்பம்
கங்காதரமூர்த்தி (கங்காதரர்)
கங்காதரமூர்த்தி (கங்காதரர்)
சிற்பத்தின் பெயர் | கங்காதரமூர்த்தி (கங்காதரர்) |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
விளக்கம்
தன் புரிசடை ஒன்றில் கங்கையைத் தாங்கும் பெருமான் (கங்காதரர்)
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
அசுரவேகத்தில் பூமிக்கு பாய்ந்து வரும் கங்கையை தன் புரி சடை ஒன்றில் தாங்கும் கங்காதரர் வலது காலை ஊன்றி, இடது காலை உயர்த்தி கீழே அமர்ந்திருக்கும் அசுரனின் வலத்தோள் மீது வைத்துபடி நின்றுள்ளார். இது தூக்கிய முழங்கால் என்ற அமைப்பாகும். (ஊர்த்துவஜானு) நான்கு திருக்கைகளில் வலது முன்கை வலது பின் கடியவலம்பிதமாக தொடையில் வைத்தவாறும், இடது பின்கை விஸ்மய (விரல்களை விரித்து வியக்கும் முத்திரை) முத்திரையிலும் இடது முன்கை தன் சடை முடியிலிருந்து ஒற்றைப் புரியை நீட்டி அதில் கங்கைப் பெண்ணை தாங்கியவாறும் அமைந்துள்ளன. ஜடாபாரம் அணிந்துள்ள இறைவன் வலதுபுறம் சாய்த்துள்ளார். நீள்காதுகளில் அணிகலன்கள் அணிந்துள்ளார்.முப்புரிநூல் இடது தோளின் வழியே செல்கிறது. அரையாடை அணிந்துள்ள இறைவனின் இடதுகாலை தாங்கியாக கொண்டு தனது வலதுகையை அதன் மேல் வைத்து ஒயிலாக சாய்ந்த நிலையில் இக்காட்சியை பார்வையிடும் தேவி தன் இடது கையில் மலரைப் பிடித்துள்ளார். கங்காதரரின் இடது மேற்புறம் பாய்ந்து வரும் கங்கை பெண் வடிவில் காட்டப்பட்டுள்ளாள். வலது மேற்புறத்தில் நாய் ஒன்று காட்டப்பட்டுள்ளது. கங்கை தன் பெருக்கால் புரி சடையை விட்டு வெளியே பாய்ந்தோடி வருவதைத் தடுக்க நாய் காட்டப்பட்டுள்ளது. புனிதமான கங்கையை நாய் தொடுதல் ஆகாதன்றோ அதனால் இருக்கலாம் என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
கங்காதரமூர்த்தி (கங்காதரர்)
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |