வழிபாட்டுத் தலம்
சென்னை சாந்தோம் தேவாலயம்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | சென்னை சாந்தோம் தேவாலயம் |
|---|---|
| வேறு பெயர்கள் | சாந்தோம் பசிலிக்கா, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை. |
| ஊர் | சாந்தோம் |
| வட்டம் | அடையாறு |
| மாவட்டம் | சென்னை |
| உட்பிரிவு | 8 |
| தாயார் / அம்மன் பெயர் | அன்னை மரியாள் |
| தலமரம் | கிறிஸ்துமஸ் மரம் |
| ஆகமம் | வேதாகமம் |
| வழிபாடு | வார நாட்கள் : காலை: 5.30 a.m & 6.30 a.m மாலை: 6.30 p.m ஞாயிறு : காலை: 5.15 a.m, 6.15 a.m & 7.30 a.m மாலை: 6.30 p.m |
| திருவிழாக்கள் | கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு, புனித தோமையர் நினைவு தினம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.1896 |
| சுவரோவியங்கள் | மேற்கூரையிலும் பக்கவாட்டிலும் வண்ண ஓவியங்கள். பெரும்பாலானவை கண்ணாடி ஓவியங்களாக இருக்கின்றன. |
| சிற்பங்கள் | 155 அடி உயரம் கொண்டது இத்தேவாலயம். கல்லறை மேல் எழுப்பப்பட்ட தேவாலயம் என்ற சிறப்பு இக்கோயிலுக்குண்டு. |
| தலத்தின் சிறப்பு | 114 ஆண்டுகள் பழமையானது. போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்டது. |
|
சுருக்கம்
சாந்தோம் பேராலயம் கோத்திக் முறையின் கீழ் கட்டப்பட்ட மிகச் சிறந்த பேராலயம்.1896ம் ஆண்டு இந்த பேராலயம் கட்டப்பட்டது. இந்திய மக்களுக்கு மட்டுமல்லாது உலகத்தின் பெருமையான அடையாளமாக இது விளங்குகிறது. சென்னை மைலாப்பூர் ரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தில் சாந்தோம் பசிலிக்காவே முதன்மை தேவாலயமாகும். 1956ஆம் ஆண்டு மார்ச்சு 16ஆம் நாள் போப்பாண்டவர் 12ஆம் பயஸ் (பத்திநாதர்) சாந்தோம் கோவிலை சிறிய பசிலிக்கா நிலைக்கு (Minor Basilica) உயர்த்தினார். பிப்ரவரி 11, 2006ஆம் ஆண்டு இது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால் தேசிய வழிபாட்டுத்தலமாக (National Shrine) அறிவிக்கப்பட்டது. இந்திய கிறித்தவர்களுக்கு இது ஓர் முக்கியமான புனிதத்தலமாகும். தேவாலயத்தில் ஓர் அருங்காட்சியகமும் உள்ளது. 2004- ஆம் ஆண்டிலும் அதைத் தொடர்ந்தும் சாந்தோம் கோவிலும் தூய தோமா கல்லறைச் சிற்றாலயமும் அழகுற புதுப்பிக்கப்பட்டு வனப்போடு விளங்குகின்றன. புதுப்பிக்கப்பட்ட கோவில் டிசம்பர் 12, 2004-இல் இந்தியாவில் போப்பாண்டவர் தூதர் பேராயர் பேத்ரோ லோப்பெசு கின்றானா மற்றும் மும்பை பேராயர் கர்தினால் இவான் டியாசு ஆகியோரால் புனிதப்படுத்தப்பட்டது. இது 16-ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடியேற்றத்தவரால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு பிரித்தானியர் குடியேற்றக் காலத்தில் விரிவாக்கப்பட்டு மீளவும் கட்டப்பட்டது. கோத்திக் கட்டட வடிவமைப்பில் எழுப்பபட்ட அந்தக் கட்டடமே தற்போது உள்ளது. இது 19-ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டடப் பொறியிலாளர்கள் பயன்படுத்திய புது கோத்திக் வகையாக அமைக்கப்பட்டுள்ளது. சாந்தோம் தேவாலயம்/கோவில்/பசிலிக்கா புனிதா தோமா என்னும் திருத்தூதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலம் ஆகும். சாந்தோம் என்னும் சொல் போர்த்துகீசிய வடிவமாகும். அது புனித தோமா என்று பொருள்படும். போர்த்துகீசியர் இக்கோவிலுக்கு இயேசுவின் அன்னை மரியாவின் பெயரை முதலில் அளித்திருந்தனர்.
|
|
சென்னை சாந்தோம் தேவாலயம்
| கோயிலின் அமைப்பு | கோத்திக் கட்டடப்பாணியில் உயர்ந்த கோபுரமாக சாந்தோம் கோவிலின் பெரிய கோபுரம் 155 அடி உயரம் கொண்டது. கோவிலின் உட்பகுதி 112 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்டது. பலிபீடம் அடங்கிய திருத்தூயகப் பகுதி 62 அடி நீளம், 33 அடி அகலம்; கோவில் உட்பகுதியில் மேல்கூரை உயரம் 36 அடி 6 அங்குலம்; திருத்தூயகப் பகுதியில் கூரை உயரம் 41 அடி 6 அங்குலம். கோவில் உட்பகுதியில் 36 பெரிய சாளரங்கள் உள்ளன. அவற்றில் நிறப்பதிகைக் கண்ணாடி (stained glass) அமைக்கப்பட்டு, கதிரவன் ஒளி கோவிலின் உள் இதமாக நுழைய வழியாகின்றன. கிறித்தவ சமயம் தொடர்பான காட்சிகள் அக்கண்ணாடிப் பதிகையில் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன. திருத்தூயகத்தின் பின்புறம் அமைந்துள்ள பெரிய நிறப்பதிகைக் கண்ணாடி செருமனியில் மூனிச் நகரில் அமைந்த மையர் (Mayer) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியில் இயேசு தோமாவுக்குத் தோன்றும் காட்சி எழிலுற வடிக்கப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட கோவில் 1896, ஏப்ரல் முதல் நாளன்று புனிதமாக்கப்பட்டது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | சென்னை-மயிலை உயர்மறை மாவட்ட திருச்சபை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | |
| செல்லும் வழி | சென்னை கடற்கரையிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | வார நாட்கள் : காலை: 5.30 a.m மற்றும் 6.30 a.m மாலை: 6.30 p.m ஞாயிறு : காலை: 5.15 a.m, 6.15 a.m மற்றும் 7.30 a.m மாலை: 6.30 p.m |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 45 |
| பிடித்தவை | 0 |