Back
வழிபாட்டுத் தலம்
பூந்தமல்லி புனித யோவான் திருமுழுக்கு ஆலயம்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் பூந்தமல்லி புனித யோவான் திருமுழுக்கு ஆலயம்
வேறு பெயர்கள் புனித ஸ்நாபக அருளப்பர் ஆலயம்
ஊர் பூந்தமல்லி
வட்டம் பூந்தமல்லி
மாவட்டம் திருவள்ளூர்
தொலைபேசி 044-26492362
உட்பிரிவு 8
தாயார் / அம்மன் பெயர் மேரி மாதா
தலமரம் கிறிஸ்துமஸ் மரம்
ஆகமம் வேதாகமம்
திருவிழாக்கள் கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு
காலம் / ஆட்சியாளர் கி.பி. 1840
கல்வெட்டு / செப்பேடு தேவாலயத்தின் நுழைவாயிலில் ஒரு நினைவுக் கல் பொது நிதியில் இருந்து நான்கு பக்கங்களிலும் கல்வெட்டு தகடுகளுடன் காணப்படுகிறது. ரெவ் Fr. ஜே பி ஃபிட்ஸ்பாட்ரிக் என்பவரை அங்கீகரிப்பதற்காக இது அமைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. ஜே பி ஃபிட்ஸ்பாட்ரிக், பூந்தமல்லியின் கட்டுப்பாட்டுக் குழுவின் முன்னாள் அதிகாரியாகவும், ஆர் சி மிலிட்டரி சேப்ளினாகவும் பணியாற்றினார். அவர் மே 28, 1848 இல் அயர்லாந்தில் ரோஸ்காமன் என்ற ஊரில் பிறந்தார். 1927 செப்டம்பர் 17 ஆம் தேதி அடையரில் உள்ள செயின்ட் பேட்ரிக் மொனாஸ்ட்ரியில் இறந்தார். 1920-ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மெட்ராஸ் அரசாங்கத்தின் முன்னாள் மந்திரி திவான் பகதூர் ஆர். என். ஆரோக்கியஸ்வாமி முதலியார் அவர்களால் கல்வெட்டுகளுக்கு ஒளியேற்றப்பட்டு திறக்கப்பட்டது என்று பின்புறம் பொறிக்கப்பட்டுள்ளது
தலத்தின் சிறப்பு 180 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
சுருக்கம்
சென்னை, பூந்தமல்லியில் அமைந்துள்ள புனித யோவான் திருமுழுக்கு தேவாலயம் கிறித்துவர்களுக்கான புனித திருமுழுக்கு செய்வதற்கான திருத்தலமாக விளங்குகிறது. இந்த திருமுழுக்கு தேவாலயம் 180 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இன்றும் இத்தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் திருமுழுக்கு எனும் ஞானஸ்நானம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பூந்தமல்லி புனித யோவான் திருமுழுக்கு ஆலயம்
கோயிலின் அமைப்பு இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்ட நிலையில் புதியதாக தோற்றமளிக்கிறது. இரண்டு அடுக்காய் தோற்றமளிக்கும் கட்டிடப்பகுதியின் மேற்புறம் நான்கு திசைகளிலும் கோபுரம் போன்ற அமைப்பு சிலுவையுடன் காணப்படுகின்றது. நாற்திசைகளிலும் காணப்படுகின்ற கோபுரம் போன்ற அமைப்பில் பெல்ஜியம் கண்ணாடியில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் ரோமன் கத்தோலிக்க திருச்சபை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் புனித மேரி மேக்டலின் தேவாலயம், சி.எஸ்.ஐ. வெஸ்லி தேவாலயம்
செல்லும் வழி பூந்தமல்லி நெடுஞ்சாலை வழி செல்லும் சென்னை மாநகரப் பேருந்துகள் மூலம் பூந்தமல்லியை அடையலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 8:30 மணி முதல் மாலை 6:15 மணி வரை
பூந்தமல்லி புனித யோவான் திருமுழுக்கு ஆலயம்
அருகிலுள்ள பேருந்து நிலையம் பூவிருந்தவல்லி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருவள்ளூர்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை மீனம்பாக்கம்
தங்கும் வசதி பூந்தமல்லி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 49
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்