வழிபாட்டுத் தலம்
அருள்மிகு பிறவாதேஸ்வரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு பிறவாதேஸ்வரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | பிறவாதேஸ்வரம் |
| ஊர் | காஞ்சிபுரம் |
| வட்டம் | காஞ்சிபுரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | பிறவாதேஸ்வரர் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு / பல்லவ மன்னன் இராஜசிம்மன் |
| கல்வெட்டு / செப்பேடு | இராஜசிம்மவர்மப் பல்லவ மன்னனின் கல்வெட்டுகள் உள்ளன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறை வெளிச்சுவரில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. பரிவார சந்நிதிகள் இல்லை. இக்கோயிலில் கோபுரம் இடம் பெறவில்லை. கிழக்குப்புறத்தில் உள்ள சிற்பங்கள் மிகவும் சிதைவுற்ற நிலையில் உள்ளன. நின்ற நிலை யாளித்தூண்கள் கருவறை விமான வெளிச்சுவரில் இடம் பெற்றுள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1200 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் கால கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலையைப் பிரதிபலிக்கிறது. |
|
சுருக்கம்
“அத்யந்தகாமன்“ என்னும் அளவில்லா ஆசையுடையவனான இராஜசிம்ம வர்மப் பல்லவ மன்னனால் கட்டப்பட்ட இக்கற்றளி இருதளங்களைக் கொண்டது. வேசர பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. தன்னை “சைவ சித்தாந்தி“ என்று கூறிக்கொள்ளும் இராஜசிம்மன் தன் விருப்பங்களையெல்லாம் ஒன்று சேர்த்து கட்டிய பல கற்றளிகளுள் இதுவும் ஒன்று. இக்கோயிலின் கலைப்பாணியை நோக்குங்கால் இறவாதீஸ்வரர் கோயில் கலைப்பாணியை அவ்வாறே ஒத்துள்ளது என்பது நோக்கத்ததக்கது. பிறப்பும் இறப்பும் இல்லா பெருமானாகிய சிவபெருமானுக்கு எடுக்கப்பட்ட இக்கற்றளி கருவறை விமான வெளிப்புற சுவர்களில் புடைப்புச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. தள உறுப்புகளாக கர்ணக்கூடு, சாலை ஆகியன இடம் பெற்றுள்ளன. சிறிய எளிய கற்றளியாக விளங்குகிறது. கிழக்குப்புறத்தில் சிற்பங்கள் சிதைவுற்றுள்ளன. தென்முகக்கடவுள், ஜலந்தரமூர்த்தி, துர்க்கை, வாயிற்காவலர், நான்முகன், திருமால், திருமகள், யாளிகள், பூதகணங்கள் ஆகிய சிற்பங்களைக் கொண்டுள்ளது.
|
|
அருள்மிகு பிறவாதேஸ்வரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | மேற்கு நோக்கிய வாயிலைக் கொண்டுள்ளது. இரு தளங்களைக் கொண்டது. வேசர பாணியில் அதாவது சிகரம் வட்ட வடிவில் அமையப் பெற்ற கலைப்பாணியைப் பெற்றுள்ளது. கருவறை வெளிப்புறச் சுவர்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. தள உறுப்புகளாக கர்ணக்கூடு, சாலை ஆகியன இடம் பெற்றுள்ளன. சிறிய எளிய கற்றளியாக விளங்குகிறது. கிழக்குப்புறத்தில் சிற்பங்கள் சிதைவுற்றுள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | இறவாதீஸ்வரர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், கைலாச நாதர் கோயில் |
| செல்லும் வழி | சென்னையிலிருந்து 65கி.மீ. தொலைவிலுள்ள காஞ்சிபுரத்திற்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 76 |
| பிடித்தவை | 0 |