வரலாற்றுச் சின்னம்

மலையடிப்பட்டி சிவன் குடைவரை

மலையடிப்பட்டி சிவன் குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் மலையடிப்பட்டி சிவன் குடைவரை
அமைவிடம் ஆலத்தூர் குடைவரைக் கோயில்
ஊர் மலையடிப்பட்டி
வட்டம் கீரனூர்
மாவட்டம் புதுக்கோட்டை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் குடைவரைக்கோயில்
விளக்கம்
மலையடிப்பட்டி சிவன் கோயில், மலையடிப்பட்டி குடைவரை, புதுக்கோட்டைக் குடைவரைகள், சங்கரநாராயணர், ஹரிஹரர், துர்க்கை, முத்தரையர் குடைவரை, சப்தமாதர்கள் புடைப்புச்சிற்பம், பல்லவர் காலக் குடைவரை, விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன், தந்தி வர்மன்
பாதுகாக்கும்நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் கருவறையில் தாய்ப்பாறையில் இலிங்கவடிவில் இறைவன் உள்ளார். அர்த்தமண்டபத்தில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. மண்டபச் சுவரில் கருவறைக்கு நேராக சங்கரநாராயணர், துர்க்கை சிற்பத் தொகுதிகள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. ஏழுகன்னிகளின் சிற்பத் தொகுதியும் அமைந்துள்ளது. குடைவரைக்கோயில் இது. அர்த்தமண்டபத்தையும், முகமண்டபத்தையும் கொண்டுள்ளது. அர்த்தமண்டபத்தில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. சிவன் குடைவரைக் கோயில் சிறிய கருவறை மற்றும் அர்த்த மண்டபத்துடன் காணப்படுகின்றது. கருவறையில் இலிங்க வடிவமுள்ளது. முன்மண்டபத்தில் விநாயகர், சங்கரநாராயணர், கொற்றவை, சப்தமாதர்கள் சிற்பங்கள் உள்ளன. இக்குடைவரைக் கோயிலைத் தந்திவர்மன் காலத்தில் கி.பி. 812-இல் விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன் என்பவன் திருவாலந்தூர் மலையில் எடுப்பித்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
ஒளிப்படம்எடுத்தவர் விஷ்ணு குடைவரைக் கோயில், குன்னாண்டார் கோயில்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் மதுரை கோ.சசிகலா
குறிச்சொற்கள்
சுருக்கம்
1100 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் காலத்தில் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியினை ஆண்ட முத்தரையர்கள் இக்குடைவரையை எடுப்பித்தனர். பல்லவர் கால கிரந்தக் கல்வெட்டுகள், பாண்டியர், சோழர் தமிழ்க் கல்வெட்டுகள், விஜயநகரர் கல்வெட்டுகள் உள்ளன. இக்குடைவரைக் கோயிலைத் தந்திவர்மன் காலத்தில் கி.பி. 812-இல் விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன் என்பவன் திருவாலந்தூர் மலையில் எடுப்பித்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. புதுக்கோட்டை சென்று அங்கிருந்து கீரனூர் வழியாக மலையடிப்பட்டி செல்லலாம்.
மலையடிப்பட்டி சிவன் குடைவரை
வரலாற்றுச் சின்னம்

மலையடிப்பட்டி சிவன் குடைவரை

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
தமிழ் இணையக் கல்விக்கழகம் 17 Dec 2019
பார்வைகள் 245
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்