Back
வரலாற்றுச் சின்னம்
ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் குடைவரை
அமைவிடம் ஆனைமலை அடிவாரம்
ஊர் ஒத்தக்கடை
வட்டம் மதுரை கிழக்கு வட்டம்
மாவட்டம் மதுரை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
இது கி.பி. 770 ஆம் ஆண்டு ஜடில பராந்தகநெடுஞ்சடையனது காலத்தில் அவனுடைய அமைச்சராகிய மாறன் காரியால் தொடக்கப்பட்டு இடையில் அவர் மறைந்தபடியால் அவர் தம்பி மாறன் எயினனால் முடிக்கப்பட்டது. இதன்கண் கருவறையில் நரசிம்மர் யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் யோகப் பட்டையுடன் அழகுறக் காணப்படுகின்றார். இரு முழங்கால்களையும் இணைக்கும் துணியாலான இணைப்பு யோகப் பட்டை எனப்படும், நான்கு கரங்களுடன் படைக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தில் பின்னிரு கைகள் சங்கு சக்கரத்துடனும் முன்னிரு கைகள் அபய வரத முத்திரையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளன. இது ஐந்தடி உயரப் புடைப்புச் சிற்பம் ஆகும்.
பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் இலாடன் கோயில், ஆனைமலை சமணர் குடைவரை, ஆனைமலை தமிழ்-பிராமிக் கல்வெட்டு
ஒளிப்படம்எடுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில் (அ) யோக நரசிம்மர் கோயில் மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் யா.ஒத்தக்கடை கிராமத்தின் அருகே உள்ள நரசிங்கம் எனும் இடத்தில் அமைந்த தொன்மையான குடைவரைக் கோவில் ஆகும். இக்கோவில் மதுரைப் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு- காலத்தில் அவரது அமைச்சரான மதுரகவி என்ற மாறன் காரி என்பவரால் கி.பி. 770-இல் உருவாக்கப்பட்டது. மாறங்காரியின் சகோதரர் மாறன் எயினன் இக்கோவிலுக்கு ஒரு முகமண்டபத்தைக் கட்டினார். கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய திருவுருவம் ஆனைமலையின் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். இக்கோயிலின் மூலவராக யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார் தெற்கு பார்த்தும் அமர்ந்துள்ளனர். கோயிலில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரின் சன்னதி தனியாக உள்ளது. யோக நரசிம்மர் கோயிலின் முகப்பில் அழகான குளம் அமைந்துள்ளது. இது, நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய கோயிலாகும்.
குறிப்புதவிகள்
ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_MON_00119/TVA_MON_00119_மத...

  • TVA_MON_00119/TVA_MON_00119_மத...

  • TVA_MON_00119/TVA_MON_00119_மத...

  • TVA_MON_00119/TVA_MON_00119_மத...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 134
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்