வரலாற்றுச் சின்னம்
மண்டகப்பட்டு குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் மண்டகப்பட்டு குடைவரை
அமைவிடம் மண்டகப்பட்டு
ஊர் மண்டகப்பட்டு
வட்டம் செஞ்சி
மாவட்டம் விழுப்புரம்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.7-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
இக்குடைவரைக் கோயில் மூன்று கருவறைகளை உடையதாக இருக்கிறது. அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகியவற்றை கொண்டள்ளது. அர்த்தமண்டபத்தில் இரண்டு அரைத்தூண்களும், இரண்டு முழுத்தூண்களும் உள்ளன. இரண்டு முழுத்தூண்களும் தரையில் இருந்து சதுரம், கட்டு, சதுரம் என உள்ளது. அவ்வாறே முகமண்டபமும் அமைக்கப்பட்டள்ளது. முகப்பின் இருபுறமும் அமைந்து உட்குழிவு வளைவில் இருபுறமும் வாயிற்காவலர்கள் நிற்கின்றனர். மேற்குப்புறத்தில் உள்ள அரைத்தூணில் பல்லவ கிரந்தத்தில் வடமொழி கல்வெட்டில் இக்குடைவரை லக்ஷிதாயனம் என பெயரிடப்பட்டுள்ளது. இக்குடைவரைக் கோயிலில் உள்ள மகேந்திரவர்மனின் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பல்லவ கிரந்த எழுத்தில் உள்ள சமஸ்கிருத கல்வெட்டு, இந்தக் கோயிலை செங்கல், மரம், உலோகம், சுதை இன்றி நான்முகன், திருமால், சிவபெருமான் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் விசித்திர சித்தனாகிய நான் தோற்றுவித்தேன் என்று மகேந்திரவர்மன் கூறுவதாக குறிப்பிடுகிறது.
பாதுகாக்கும்நிறுவனம் இந்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் தளவானூர் குடைவரைக் கோயில், செஞ்சிக் கோட்டை, பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளகுடைவரைக் கோயில் இலக்சிதன் கோயில் என இங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இக்குடைவரை கோயில் தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயிலாகும். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது. இக்கோயில். தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது. மிகவும் எளிய, எழில் வாய்ந்த குடைவரைக் கோயிலாக இக்கோயில் விளங்குகிறது.
மண்டகப்பட்டு குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    11 Files

  • TVA_MON_00005_குடைவரை...

  • TVA_MON_00005_குடைவரை...

  • TVA_MON_00005_குடைவரை...

  • TVA_MON_00005_குடைவரை...

  • TVA_MON_00005_குடைவரை...

  • TVA_MON_00005_குடைவரை...

  • TVA_MON_00005_குடைவரை...

  • TVA_MON_00005_குடைவரை...

  • TVA_MON_00005_குடைவரை...

  • TVA_MON_00005_குடைவரை...

  • TVA_MON_00005_குடைவரை...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் இந்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Apr 2017
பார்வைகள் 299
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்