வரலாற்றுச் சின்னம்
வள்ளிமலை சமணர் குடைவரை
வள்ளிமலை சமணர் குடைவரை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | வள்ளிமலை சமணர் குடைவரை |
|---|---|
| அமைவிடம் | வள்ளிமலை |
| ஊர் | வள்ளிமலை |
| வட்டம் | குடியாத்தம் |
| மாவட்டம் | வேலூர் |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | குடைவரைக்கோயில் |
|
விளக்கம்
வள்ளிமலை, சமணர், சமண குகைத்தளம், சைனம், ஜைனம், சமணம், தீர்த்தங்கரர், திருமலை, மலைக்குகை, வேலூர், குடியாத்தம்
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | இயற்கையாய் அமைந்த குகையில் சமணத்தடயங்கள் உள்ளன. இம்மலைக்குக் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக காணப்படுகின்றன. மகாவீரர், நேமிநாதர் ஆகிய தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் எழிலானவை. இந்தச் சமண உருவங்களின் கீழ்க் கன்னட மொழியில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல் எழுத்துக்களினால், இங்குள்ள குகையை உண்டாக்கியவன் இராசமல்லன் என்னும் கங்ககுல அரசன் என்பது தெரியவருகின்றது. மேல் கூறப்பட்ட சமண உருவங்களின் கீழ்ப் பொறிக்கப்பட்டுள்ள கல் எழுத்துக்களில் ஒன்று, ‘அஜ்ஜ நந்தி பட்டாரர் இந்தப் பிரதிமையைச் செய்தார்’ என்றும், இன்னோர் எழுத்து, ‘ஸ்ரீபாணராயரின் குருவாகிய பவணந்தி பட்டாரரின் மாணவராகிய தேவசேன பட்டாரரின் திருவுருவம்’ என்றும், மற்றோர் எழுத்து ‘பால சந்திர பட்டாரரது சீடராகிய அஜ்ஜநந்தி பட்டாரர் செய்த பிரதிமை; கோவர்த்தன பட்டாரர் என்றாலும் அவரே’ என்றும் கூறுகின்றன. |
| ஒளிப்படம்எடுத்தவர் | திருமலை, மேல்பாடி அரிஞ்சிச்சீவரம் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | திரு.சரவணராஜா |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் உள்ள மேல்பாடிக்கு அருகில் உள்ளது வள்ளிமலை என்னும் கிராமம். இக் கிராமத்தில் உள்ள குன்று கற்பாறைகளால் அமைந்துள்ளது. இக் குன்றின் கிழக்குப் பக்கத்தில் இயற்கையாய் அமைந்த ஒரு குகை காணப்படுகிறது. இதன் அருகில் கற்பாறையில் இரண்டு தொகுதி சமண உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
|
|
வரலாற்றுச் சின்னம்
வள்ளிமலை சமணர் குடைவரை
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | மத்தியத் தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 17 Dec 2019 |
| பார்வைகள் | 284 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |