கள்ளபட்டி பாறை செக்கு
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | கள்ளபட்டி பாறை செக்கு |
|---|---|
| அமைவிடம் | கள்ளபட்டி வெண்டி முத்தையா |
| ஊர் | கள்ளபட்டி |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | வரலாற்றுக் காலம் |
|
விளக்கம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு தாலுகா கள்ளபட்டி அருகே உள்ள வெண்டி முத்தையா கோவில் பிரசித்தி பெற்ற குல தெய்வக் கோவில். இக் கோயில் மதுரையில் இருந்து மேற்கே செல்லும் பழைய வணிக பாதையில் திடியன் அருகே உள்ளது. இவ்வூரில் உள்ள கண்மாயில் கோவிலுக்கு மேற்கே உள்ள இரண்டு பாறைத்திட்டுக்களில் கல் உரல் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வுரல் கோயிலுக்கு வரும் பக்தர்கள், அவ்வழியில் பயணம் செய்யும் பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் பொது நலன் கருதி உருவாக்கப்பட்டதாகும். பொதுவாக இது போன்ற கல் உரல்களில் எழுத்துக்கள் கி.பி 9ம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் இருப்பினும் இவ்வுரலில் கல்வெட்டுக்கள் பொறிக்கப்படவில்லை இருப்பினும் இன்றைய பயன்பாட்டில் செயல்பாடு இல்லாமல் இருப்பினும், இது போன்ற உரல்களும் ஒரு தொல்லியல் சின்னமாகும். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
பொது மக்கள் பயன்பாட்டுக்காக பொது இடங்களில் இது போன்ற உரலை பாறைகள் மீது செதுக்கி வைக்கும் முறை பல இடங்களில் காணப்படுகிறது. இவை திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் மட்டுமன்றி வழிப்போக்கர்களும் சமைத்து உண்ணுவதற்கு வசதியாக இது போன்ற உரல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. |
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
7 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Sep 2022 |
| பார்வைகள் | 274 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |